தொழில் வழித்தடத் திட்டத்தின் கீழ் நான்கு விவேக நகரங்கள்

புது­டெல்லி: மத்­திய அரசு நான்கு விவேக நக­ரங்­களை உரு­வாக்கி வரு­வ­தாக மத்­திய தொழில் அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

நாட்­டின் வெவ்­வேறு மாநி­லங்­களில் இவை அமைக்­கப்­பட்டு வரு­வ­தா­க­வும் இதற்­காக ரூ.16,750 கோடி முத­லீடு செய்­யப்­பட்­டுள்­ள­தா­க­வும் அந்த அமைச்சு கூறி­யது.

தொழில் வழித்­த­டத் திட்­டத்­தின் கீழ் அமைக்­கப்­படும் இந்­தப் புதிய நிறு­வ­னங்­க­ளுக்­கான கட்­ட­மைப்­பில் தென்­கொ­ரி­யா­வின் ஹியோ­சங், ரஷ்­யா­வின் என்­எல்­எம்கே, சீனா­வின் ஹாயர், டாடா கெமிக்­கல்ஸ், அமுல் ஆகிய நிறு­வ­னங்­கள் முக்­கிய முத­லீட்­டா­ளர்­க­ளாக உள்­ளன.

இந்த நிறு­வ­னங்­க­ளின் பயன்­பாட்­டுக்­காக 754 ஏக்­கர் நிலம் ஒதுக்­கப்­பட்­டுள்­ள­தாக மத்­திய தொழில் அமைச்சு கூறி­யுள்­ளது. மேலும், குஜ­ராத், மகா­ராஷ்­டிரா, உத்­த­ரப் பிர­தே­சம், மத்­தி­யப் பிர­தே­சம் ஆகிய நான்கு மாநி­லங்­களில் இந்­தப் புதிய விவேக நக­ரங்­கள் அமைய உள்­ளன.

இதற்­கி­டையே நாட்­டின் வேறு பகு­தி­களில் பெரும் செல­வி­லான 23 திட்­டப் பணி­கள் நடை­பெற்று வரு­கின்­றன. தொழில் வழித்­த­டங்­களில் செயல்­பட்டு வரும் அத்­திட்­டங்­கள் வெவ்­வேறு கட்­டங்­களில் உள்­ளன. இதை மத்­திய தொழில் அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!