பிரியங்கா: ரூ.8,000 கோடி விமானத்தில் பறக்கும் மோடி

பிரியங்கா: ரூ.8,000 கோடி விமானத்தில் பறக்கும் மோடி

1 mins read
0d13b5dc-9e40-42ca-a50e-fb4a5c1ad3d8
-

லக்னோ: பிர­த­மர் மோடி­யின் நண்­பர்­க­ளாக உள்ள பெரும் தொழி­ல­தி­பர்­கள் தினந்­தோ­றும் பத்­தா­யி­ரம் கோடி ரூபாய் சம்­பா­திப்­ப­தாக காங்­கி­ரஸ் பொதுச்­செ­ய­லா­ளர் பிரி­யங்கா காந்தி கூறி­யுள்­ளார்.

உத்­த­ரப் பிர­தே­சத்­தில் நடை­பெற்ற கூட்­டம் ஒன்­றில் பேசிய அவர், நாட்­டில் உள்ள ஏழை மக்­கள் நாள்­தோ­றும் 27 ரூபாய் மட்­டுமே சம்­பா­திப்­ப­தா­கக் குறிப்­பிட்­டார்.

மத்­திய அரசு ஏழை மக்­க­ளுக்­காக ஏதும் செய்­ய­வில்லை என்­று பிரி­யங்கா சாடினார்.

"பிர­த­மர் மோடி பயன்­ப­டுத்­தும் விமா­னத்­தின் விலை என்ன என்று உங்­க­ளுக்­குத் தெரி­யுமா? ரூ.8 ஆயி­ரம் கோடி. அதில்­தான் அவர் இங்கு வந்து உங்­க­ளி­டம் பேசிச் செல்­கி­றார். ஆனால் உங்­க­ளின் வரு­மா­னம் உய­ர­வில்லை.

"எட்­டா­யி­ரம் கோடி ரூபாய் மதிப்­புள்ள விமா­னத்­தில் பறக்­கும் பிர­த­மர் மோடி­யால் விவ­சா­யி­க­ளின் கடன்­களைத் தள்­ளு­படி செய்ய முடி­ய­வில்லை," என்றார் பிரி­யங்கா.