ஏர்செல், மேக்சிஸ் வழக்கில் சிதம்பரம், கார்த்திக்கு 'சம்மன்'

ஏர்செல், மேக்சிஸ் வழக்கில் சிதம்பரம், கார்த்திக்கு 'சம்மன்'

1 mins read
52d85659-42a6-40ad-87ee-2ba305b151ac
-

புது­டெல்லி: ஏர்­செல், மேக்­சிஸ் முறை­கேடு வழக்­கில் முன்­னாள் மத்­திய நிதி அமைச்­சர் ப.சிதம்­ப­ரம், அவ­ரது மகன் கார்த்தி சிதம்­ப­ரம் ஆகிய இரு­வ­ருக்­கும் டெல்லி உயர் நீதி­மன்­றம் அழைப்பாணை பிறப்­பித்­துள்­ளது.

கடந்த 2006ஆம் ஆண்டு மேக்­சிஸ் நிறு­வ­னத்­தின் துணை நிறு­வ­னம் ஒன்று, ஏர்­செல் நிறு­வ­னத்­தில் ரூ.3,500 கோடி முத­லீடு செய்­தது. இதில் பல்­வேறு விதி­மீ­றல்­கள் உள்­ள­தாக குற்­றச்­சாட்டு எழுந்­தது.

இந்த முறை­கேட்­டில் அப்­போ­தைய மத்­திய நிதி­ய­மைச்­சர் சிதம்­ப­ரத்­துக்­கும் அவ­ரது மகன் கார்த்தி சிதம்­ப­ரத்­துக்­கும் தொடர்­புள்­ள­தாக எதிர்க்­கட்­சி­கள் குற்­றம்­சாட்­டின.

இது­கு­றித்து வழக்­குப்­ப­திவு செய்து விசா­ரணை மேற்­கொண்ட மத்­திய அம­லாக்­கத்­து­றை­யும் சிபி­ஐ­யும் இப்­போது டெல்லி உயர் நீதி­மன்­றத்­தில் குற்­றப்­பத்­தி­ரி­கையைத் தாக்­கல் செய்­துள்­ளன. இதை­ய­டுத்து இவ்­வ­ழக்­கில் குற்­றம்­சாட்­டப்­பட்ட ப.சிதம்­ப­ரம், கார்த்தி சிதம்­ப­ரம் உள்­ளிட்­டோ­ருக்கு உயர் நீதி­மன்­றம் அழைப்பாணை அனுப்பி உள்ளது.

இவ்வழக்கில் புதிய ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும் அவை குறித்து சிபிஐ விசாரித்து வருவதாகவும் மத்திய விசாரணை அமைப்புகளின் வழக்கறிஞர் சஞ்சய் ஜெயின் தெரிவித்துள்ளார்.