‘நாம் இயற்கையைக் காத்தால் அது நம்மைக் காக்கும்’

புதுடெல்லி: நம்­மைச் சுற்­றி­யுள்ள இயற்கை வளங்­களைப் பாது­காக்க வேண்­டும் என பிர­த­மர் மோடி அறி­வு­றுத்தி உள்­ளார்.

இயற்­கையை நாம் பாது­காக்­கும்­போது அதற்­குப் பிர­தி­ப­ல­னாக இயற்கை மனி­தர்­க­ளைப் பாது­காக்­கும் என்று 'மன் கி பாத்' வானொலி நிகழ்ச்­சி­யில் பேசி­ய­போது அவர் குறிப்­பிட்­டார்.

தமி­ழ­கத்­தின் தூத்­துக்­குடி மாவட்ட மக்­கள் இயற்­கை­யை­யும் அதன் வளங்­க­ளை­யும் பாது­காப்­ப­தில் முக்­கிய பங்கு வகிப்­ப­தாக குறிப்­பிட்ட பிர­த­மர் மோடி, தூத்­துக்­கு­டி­யில் உள்ள சிறிய தீவு­கள், திட்­டு­கள் கட­லில் மூழ்­கா­மல் இருக்க அம்­மக்­கள் பனை­ம­ரங்­களை நடு­வ­தாகத் தெரி­வித்­தார்.

"புயல், சூறா­வ­ளி­யி­லும் நிமிர்ந்து நின்று அம்­ம­ரங்­கள் நிலத்­தைப் பாது­காக்­கின்­றன. இயற்­கை­யைப் பாது­காப்­ப­தால் விளை­யும் நன்­மையை தமி­ழக மக்­கள் உணர்த்தி உள்­ள­னர். இது போன்ற பகு­தி­கள் அழிந்­து­வி­டா­மல் காப்­பாற்­றப்­படும் என்ற நம்­பிக்கை ஏற்­பட்­டுள்­ளது," என்று பிர­த­மர் மோடி பாராட்­டி­னார்.

உத்­த­ரப் பிர­தே­சத்­தின் ஜலான் என்ற இடத்­தில் நூன் என்று அழைக்­கப்­படும் ஆறு இருந்­த­தா­க­வும் படிப்­ப­டி­யாக அது அழி­வின் விளிம்­புக்­குச் சென்­றது என்­றும் குறிப்­பட்ட பிர­த­மர் மோடி, அப்­ப­குதி விவ­சா­யி­க­ளுக்கு இத­னால் நெருக்­கடி ஏற்­பட்­டது என்று தெரி­வித்­தார்.

இந்­நி­லை­யில், ஜலான் பகுதி மக்­கள் இந்த ஆண்டு குழு ஒன்றை அமைத்து அந்த நதிக்குப் புத்­து­யிர் அளித்­த­தாகப் பாராட்­டி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!