மன அழுத்தம்: ஐந்து பேரைக் கொன்றவர் கைது

புது­டெல்லி: மன அழுத்­தத்­தால் பாதிக்­கப்­பட்ட ஒரு­வர் இரும்­புக்­கம்­பி­யைக் கொண்டு கண்­மூ­டித்­த­ன­மா­கத் தாக்­கி­ய­தில் ஐந்து பேர் உயி­ரி­ழந்­த­னர். இச்­சம்­ப­வம் திரி­பு­ரா­வில் நிகழ்ந்­துள்­ளது.

அங்­குள்ள ஷெவ்­ர­தாலி கிரா­மத்­தைச் சேர்ந்த பிர­தீப் தேப்­ராய் என்ற ஆட­வர், நேற்று முன்­தி­னம் திடீ­ரென தன் வீட்­டில் இருந்த தனது இரண்டு மகள்­கள், தம்­பியை இரும்­புக்­கம்­பி­யால் தாக்­கி­யுள்­ளார்.

இதில், மூவ­ரும் படு­கா­யம் அடைந்து, அங்­கேயே உயி­ரி­ழந்­த­னர். பின்­னர் தன் மனை­வி­யை­யும் கடு­மை­யா­கத் தாக்­கி­விட்டு வீட்டை விட்டு வெளி­யே­றி­னார் பிர­தீப்.

சாலை­யில் சென்ற ஆட்­டோவை நிறுத்தி, அதன் ஓட்­டு­ந­ரை­யும் அவ­ரது மக­னை­யும் தாக்­கி­னார். இதில் ஓட்­டு­நர் ரத்த வெள்­ளத்­தில் பலி­யா­னார். ஓட்­டு­ந­ரின் மக­னும் பிர­தீப்­பின் மனை­வி­யும் மருத்­து­வ­ம­னை­யில் உயி­ருக்­குப் போராடி வரு­கின்­ற­னர்.

இது­கு­றித்து தக­வல் அறிந்த போலி­சார், விரைந்து சென்று பிர­தீப்பை கைது செய்ய முயன்­ற­னர். அப்­போது காவல்­துறை ஆய்­வா­ள­ரை­யும் அவர் விட­வில்லை. பிர­தீப் தாக்­கி­ய­தில் ஆய்­வா­ள­ரும் படு­கா­யம் அடைந்து மருத்­து­வ­ம­னைக்குக் கொண்டு செல்­லும் வழி­யில் உயி­ரி­ழந்­தார். இந்நிலையில், பிரதீப் கைதாகி உள்ளார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!