செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
044f1d5c-fa5a-4825-aa12-941f2523c057
-

அசாம்: ரூ.12.96 கோடி மதிப்புள்ள போதை மாத்திரைகள் பறிமுதல்

கவுஹாத்தி: அசாம் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட அதிரடி சோதனை நடவடிக்கையின் போது 32 கிலோ எடையுள்ள போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. நேற்று முன்தினம் கரீம்கஞ்ச் மாவட்டத்தில் சந்தேகத்துக்குரிய வகையில் நடமாடிய ஒருவரை பாதுகாப்புப் படையினர் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் பெயர் சம்சூன் நூர் என்பதும் அவரிடம் 259,200 போதை மாத்திரைகள் இருப்பதும் தெரியவந்தது. அம்மாத்திரைகளின் அனைத்துலகச் சந்தை மதிப்பு ரூ.12.96 கோடி என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசு: டிசம்பர் முதல் தக்காளி விநியோகம் சீரடையும், விலை குறையும்

புதுடெல்லி: வடமாநிலங்களில் இருந்து பிற மாநிலங்களுக்கான தக்காளி விநியோகம் டிசம்பர் மாதத்தின் முதல் வாரத்திலேயே தொடங்கும் என்றும் இதன் காரணமாக தக்காளி விலை வீழ்ச்சி அடையும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. பஞ்சாப், உத்தரப் பிரதேசம், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பருவம் தவறிப் பெய்த மழை காரணமாக தக்காளி பயிரிடுவதும் அதன் விநியோகமும் பாதிக்கப்பட்டதாக மத்திய நுகர்வோர் நலன், உணவு, பொது விநியோக அமைச்சு தெரிவித்துள்ளது. தென் மாநிலங்களிலும் கனமழை காரணமாக தக்காளி விநியோகம் பாதிக்கப்பட்டதாக அந்த அமைச்சின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்று முதல் மூன்று வாரங்களுக்கு நாடாளுமன்ற கூட்டத் தொடர்

புதுடெல்லி: பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில், நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. முதல் நாளன்றே புதிய வேளாண் சட்டங் களைத் திரும்பப் பெறுவதற்கான மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்கிறது. இந்தக் கூட்டத் தொடர் மூன்று வாரங்களுக்கு நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு நேற்று நாடாளுமன்ற சபாநாயகர் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. அப்போது கூட்டத் தொட ரில் விவாதிக்கப்பட வேண்டிய விஷயங்கள் குறித்து கலந்தா லோசிக்கப்பட்டது. இந்தக் கூட்டத் தொடரில் மத்திய அரசு 26 மசோதாக்களைத் தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்க்கட்சிகள் தரப்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து குரல் எழுப்பப்பட உள்ளன.