நல்லபாம்புக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை

1 mins read
3140d1d2-1880-4dd5-9505-14475a157a4d
-

சென்னை: தலைநகர் சென்னையில் கனமழையால் கால்நடைகளும் வீதிகளில் வாழும் நாய், பூனை களும் இரை கிடைக்காமல் தவிக் கின்றன. இவற்றுடன் பாம்புகளும் படையெடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், சென்னை பாடி லூகாஸ் பகுதியில் தேங்கிய மழை நீரை வெளியேற்றும் பணி நடந்து கொண்டிருந்தபோது, புதரில் இருந்த 5 அடி நீளம் கொண்ட நல்ல பாம்பு ஒன்று, மண் தோண்டப் பயன்படும் பொக்லைன் இயந்திரத்தில் சிக்கி வயிறு கிழிந்து குடல் வெளியே வந்த நிலையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தது. இதையறிந்த வனத்துறை அதி காரிகள் பாம்பை மீட்டு, கிண்டி யிலுள்ள வனத்துறை மருத்துவ மனைக்கு எடுத்துச் சென்றனர். அந்தப் பாம்புக்கு மயக்க மருந்து கொடுத்து, 'ஆக்சிஜன் மாஸ்க்' அணிவித்து, அறுவை சிகிச்சை செய்து அதன் உயிரைக் காப்பாற்றி யுள்ளனர் கிண்டி வனத்துறை மருத்துவர்கள். தற்போது கண்ணாடிக் குடுவையில் வைத்து அதன் உடல்நிலை கண்காணிக்கப்பட்டு வருகிறது. பாம்பைக் காப்பாற்றிய வனத்துறை மருத்துவர்களைப் பலரும் சமூக வலைத்தளங்களில் பாராட்டி வருகின்றனர்.