பாட்னா: பாலியல் வன்கொடுமை வழக்கில் 14 வயதுச் சிறுவனை குற்றவாளி என அறிவித்துள்ளது பீகார் சிறார் சிறப்பு நீதிமன்றம்.
சிறுவனுக்கு மூன்றாண்டு சிறைத்தண்டனை விதித்த நீதிபதி, அவனை சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்ப உத்தரவிட்டார்.
பீகார் மாநிலம், அராரியா மாவட்ட கிராமத்தைச் சேர்ந்த 14 வயதுச் சிறுவன் கடந்த அக்டோபர் 8ஆம் தேதி ஒரு சிறுமியைப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாகப் புகார் எழுந்தது.
இதுகுறித்து விசாரணை நடத்திய போலிசார் சிறுவனைக் கைது செய்தனர். பின்னர் நாளந்தாவில் உள்ள சிறார் சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது காவல்துறை தரப்பில் முன்வைக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் சிறுவன் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாக நீதிபதி தெரிவித்தார்.
இதையடுத்து சிறுவனுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. வெள்ளிக்கிழமையன்று இந்த வழக்கு ஒரே நாளில் முடித்து வைக்கப்பட்டது.
இந்தியாவில் எந்தப் பாலியல் வழக்கிலும் இவ்வாறு ஒரே நாளில் தீர்ப்பு வழங்கப்பட்டதில்லை.