புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும் மசோதா நிறைவேறியது நாடாளுமன்றத்தில் அமளி; எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்

புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும் மசோதா நிறைவேறியது நாடாளுமன்றத்தில் அமளி; எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்

2 mins read
5a58963f-434c-479b-8323-d9745a5635df
நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். படம்: ஏஎஃப்பி -

புது­டெல்லி: நாடா­ளு­மன்ற குளிர்­கால கூட்­டத்­தொ­ட­ரின் முதல் நாளே மக்­க­ள­வை­யில் அமளி நில­வி­யது. எனி­னும் மூன்று வேளாண் சட்­டங்­களை ரத்து செய்­வ­தற்­கான மசோதா நேற்று நிறை­வேற்­றப்­பட்­டது.

அனைத்து பிரச்­சி­னை­கள் குறித்­தும் நாடா­ளு­மன்­றத்­தில் விவா­திக்க மத்­திய அரசு தயா­ராக உள்­ளது எனப் பிர­த­மர் மோடி தெரி­வித்­துள்­ளார்.

இந்­நி­லை­யில், நாடா­ளு­மன்­றத்­தில் அம­ளி­யில் ஈடு­பட்­டது தொடர்­பாக எதிர்க்­கட்­சி­க­ளைச் சேர்ந்த 12 உறுப்­பி­னர்­கள் அவை நட­வ­டிக்­கை­களில் இருந்து இடை­நீக்­கம் செய்­யப்­பட்­டுள்­ள­னர்.

நாடா­ளு­மன்­றத்­தின் குளிர்­கால கூட்­டத்­தொ­டர் நேற்று காலை 11 மணிக்கு தொடங்­கி­ய­தும், மக்களவையில் எதிர்க்­கட்சி உறுப்­பி­னர்­கள் பல்­வேறு கோரிக்­கை­களை முன்­வைத்து சபா­நா­ய­கர் இருக்­கையை முற்­று­கை­யிட்­ட­னர். சில உறுப்­பி­னர்­கள் மத்­திய அர­சுக்கு எதி­ராக முழக்­கங்­கள் எழுப்­பி­ய­தால் அவை­யில் கூச்­ச­லும் குழப்­ப­மும் நில­வி­யது. இதை­ய­டுத்து அவை நட­வ­டிக்­கை­களை 12 மணி வரை ஒத்திவைத்­தார் சபா­நா­ய­கர்.

அவை மீண்­டும் கூடி­ய­தும் புதிய வேளாண் சட்­டங்­களைத் திரும்­பப் பெறு­வ­தற்­கான மசோதா தாக்­கல் செய்­யப்­பட்டு, எதிர்க்­கட்­சி­க­ளின் அம­ளிக்கு மத்­தி­யில் நிறை­வேற்­றப்­பட்­டது. பின்­னர் அவை மீண்­டும் ஒத்திவைக்­கப்­பட்­டதை அடுத்து எதிர்க்­கட்சி எம்­பிக்­கள், அவை­யில் இருந்து வெளி­யேறி, நாடா­ளு­மன்ற வளா­கத்­தில் உள்ள காந்தி சிலை முன்பு கூடி, வேளாண் சட்­டங்களை எதிர்த்து ஆர்ப்­பாட்­டத்­தில் ஈடுபட்டனர்.

இது மக்­க­ளை­யும் விவ­சா­யி­களை­யும் ஏமாற்­றும் செயல் என பாஜக கூறி­யுள்­ளது. வேளாண் சட்­டங்­களைத் திரும்­பப் பெறும் மசோதா நிறை­வேற்­றப்­பட்ட நிலை­யில், எதிர்க்­கட்­சி­கள் தேவை­யின்றி போராட்­டத்­தில் ஈடு­பட்­டுள்­ள­தாக அக்­கட்­சி­ சாடியது.

இந்நிலையில், எதிர்க்கட்சிகள் எழுப்பும் அனைத்து கேள்விகளுக் கும் பதில் அளிக்க மத்திய அரசு தயாராக உள்ளது என்றும் நடப்புத் தொடர் செயல்பாடு மிக்க தொடராக அமையவேண்டும் என்றும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.