இறுதிச்சடங்குக்கு சடலத்துடன் சென்ற 18 பேர் விபத்தில் பலி

கோல்­கத்தா: இறு­திச்­ச­டங்­குக்­காக சட­லத்­தைக் கொண்டு சென்ற லாரி, மற்­றொரு லாரி மீது மோதி விபத்­துக்­குள்­ளா­ன­தில் 18 பேர் பலி­யா­கி­விட்டனர். இந்­தச் சம்­பவம் மேற்­கு­வங்க மாநி­லம், நடியா மாவட்­டத்­தில் நிகழ்ந்­தது.

நேற்று முன்­தி­னம் சக்டா பகுதி­யைச் சேர்ந்த முதி­ய­வர் கால­மானார். இதை­ய­டுத்து இறு­திச் சடங்­குக்­காக அவ­ரது உடலை சிறியரக லாரி­யில் வைத்து இடு­காட்­டுக்கு கொண்டு சென்­ற­னர்.

அப்­போது உறவினர்­கள், நண்­பர்­கள் என 35 பேர் அந்த லாரி­யில் ஏறிக்­கொண்­ட­னர்.

அதி­காலை சுமார் மூன்று மணி­ய­ள­வில் மாநில நெடுஞ்­சா­லை­யில் சென்று கொண்­டி­ருந்­த­போது, அந்த லாரி திடீ­ரென ஓட்­டு­ந­ரின் கட்­டுப்­பாட்டை இழந்து தாறு­மா­றாக ஓடி­யது.

பின்­னர், சாலை­யோ­ரம் நின்­றி­ருந்த மற்­றொரு லாரி மீது பயங்­கர வேகத்­தில் மோதி­யது.

இந்த விபத்­தில் சிறியரக லாரி­யில் இருந்த 12 பேர் அந்த இடத்­தி­லேயே பலி­யா­கி­னர். மேலும் ஆறு பேர் மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்சை பல­னின்றி உயி­ரி­ழந்­து­விட்­ட­னர்.

இறந்­த­வர்­களில் ஆறு பெண்­களும் ஒரு குழந்­தை­யும் அடங்கு­வர். அதி­காலை வேளை­யில் அதிக பனி­மூட்­டம் நில­வி­யது விபத்­துக்­கான கார­ண­மாக இருக்­கும் எனக் கரு­தப்­ப­டு­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!