கேரளா: நோரோ தொற்றால் 54 மாணவிகள் பாதிப்பு

1 mins read
827378e8-fb5c-4d57-a24c-02f190da4833
-

திரு­வ­னந்தபுரம்: கொரோனா தொற்­றுப் பர­வ­லால் அதி­கம் பாதிக்­கப்­பட்ட மாநி­லங்­களில் ஒன்­றான கேர­ளாவை இப்­போது நோரோ கிரு­மி­யும் சோதித்து வரு­கிறது. அங்கு அண்­மைய சில தினங்களாக நோரோ தொற்­றுப் பாதிப்­பும் அதி­க­ரித்­துள்­ளது.

இந்­தி­யா­வைப் பொறுத்­த­வரை, கொரோனா, ஜிகா, நிபா, நோரோ என்று மனி­தர்­களை அச்­சு­றுத்­தும் அனைத்து வகை கிரு­மி­களும் கேர­ளா­வில்­தான் முத­லில் கண்டறி­யப்­ப­டு­கின்­றன.

தற்­போது இந்­தி­யா­வில் கொரோனா கிரு­மித்­தொற்­றால் அன்­றா­டம் புதி­தாக பாதிக்­கப்­ப­டு­வோர் எண்­ணிக்­கை­யில் சரி­பாதி கேர­ளா­வின் பங்­க­ளிப்­பா­கவே உள்­ளது. இந்­நி­லை­யில் நோரோ தொற்­றுப் பாதிப்­பும் அம்­மா­நில அர­சுக்கு கவலை ஏற்­ப­டுத்தி உள்­ளது.

திருச்­சூ­ரில் உள்ள ஒரு தனி­யார் கல்­லூரி தங்­கும் விடு­தி­யில் உள்ள 54 மாண­வி­களும் மூன்று ஊழி­யர்­களும் நோரோ கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். அசுத்­த­மான குடி­நீர் கார­ண­மாக இந்­தத் தொற்று பர­வி­ய­தாக அம்­மா­நில சுகா­தா­ரத்­துறை தெரி­வித்­துள்­ளது.

கடந்த மாதம் 8ஆம் தேதியே தொற்று அறி­கு­றி­கள் தென்­பட்ட நிலை­யில், அம்­மா­ண­வி­களில் பலர் தனி­யார் மருத்­து­வ­ம­னை­களில் சிகிச்சை பெற்று வந்­த­னர். அவர்­களில் எட்டு பேர் மட்­டும் சிகிச்சைக்­காக அரசு மருத்­து­வ­ம­னைக்கு வந்­த­போ­து­தான் சுகா­தா­ரத்­து­றைக்கு தக­வல் கிடைத்­தது. இதை­ய­டுத்து தொற்றுப்­ப­ர­வல் தடுப்பு நட­வ­டிக்­கை­கள் தீவி­ர­ம­டைந்­துள்­ளன.