பாதிப்புகளே படிப்பினைகள்: மத்திய அரசு அறிவுறுத்து

பாதிப்புகளே படிப்பினைகள்: மத்திய அரசு அறிவுறுத்து

2 mins read
fcb78614-963e-4e46-bd77-c0066c0f0bf7
-

'ஓமிக்ரான்': வெளிநாட்டு விமானங்களுக்குத் தடை கோரும் தலைவர்கள்

புது­டெல்லி: 'ஓமிக்­ரான்' தொற்­றுப் பாதிப்பு கார­ண­மாக, இந்­தி­யா­வில் கொரோனா மூன்­றா­வது அலை ஏற்­ப­டா­மல் இருக்க மாநில அர­சு­கள் அனைத்து முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­க­ளை­யும் மேற்­கொள்ள வேண்­டும் என மத்­திய அரசு அறி­வு­றுத்தி உள்­ளது.

இதற்கு முன் ஏற்­பட்ட கொரோனா பாதிப்­பு­களை படிப்­பி­னை­யா­கக் கொண்டு, மாநில அர­சு­கள் செயல்­பட வேண்­டும் என மத்­திய சுகா­தா­ரச் செய­லா­ளர் ராஜேஷ் பூசன் கேட்­டுக்­கொண்­டுள்­ளார்.

உரு­மா­றிய கொரோனா வகை­யான 'ஓமிக்­ரான்' உல­கெங்­கி­லும் புதிய அச்­சு­றுத்­த­லாக உரு­வெ­டுத்து வரு­கிறது. இது­கு­றித்து மாநில அர­சு­க­ளு­டன் நேற்று விரி­வான ஆலோ­சனை மேற்­கொண்­டது மத்­திய அரசு.

அப்­போது, மாநி­லங்­களில் 'ஓமிக்­ரான்' தொற்­றுப் பர­வலை எவ்­வாறு தடுக்­க­லாம் என்­பது குறித்து மத்­திய சுகா­தார அமைச்­சின் செய­லா­ளர் ராஜேஷ் பூஷன் விரி­வாக விவ­ரித்­தார்.

எத்­த­கைய முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­கள் பலன் தரும் என்று விளக்­கம் அளித்த அவர், ஒவ்­வொரு மாநி­லத்­தி­லும் இது­வரை எடுக்­கப்­பட்­டுள்ள முன்­னெச்­சரிக்கை நட­வ­டிக்­கை­கள் குறித்­தும் கேட்­ட­றிந்­தார்.

இந்த ஆலோ­ச­னைக் கூட்­டத்­தில் தமி­ழக சுகா­தா­ரத்­துறை செய­லர் ராதா­கி­ருஷ்­ணன் தலை­மை­யில் உய­ர­தி­கா­ரி­கள் பங்­கேற்­ற­னர்.

இதற்­கி­டையே உத்­த­ரப் பிர­தே­சத்­துக்கு வந்­துள்ள நான்கு வெளி­நாட்டுச் சுற்­றுலாப் பய­ணி­க­ளுக்கு 'ஓமிக்­ரான்' பாதிப்பு இருப்­பது உறுதி செய்­யப்­பட்­ட­தாக வெளி­யான தக­வல் உண்­மை­யல்ல என்று தெரி­ய­வந்­துள்­ளது. நாட்­டில் இது­வரை யாருக்­கும் அந்­தப் பாதிப்பு இருப்­ப­தாக உறுதி செய்­யப்­ப­ட­வில்லை என மத்­திய சுகா­தார அமைச்­சர் மாண்­டவ்யா மன்­சுக் நேற்று தெரி­வித்­தார்.

இதற்­கி­டையே வெளி­நா­டு­களில் இருந்து வரும் விமா­னங்­க­ளுக்கு தடை­வி­திக்க வேண்­டும் என்­றும் டெல்லி முதல்­வர் அர்­விந்த் கெஜ்­ரி­வால் மத்­திய அரசை வலி­யு­றுத்தி உள்­ளார்.

ஓமிக்­ரான் பாதிப்­புள்ள நாடு­க­ளு­ட­னான விமா­னப் போக்­கு­வ­ரத்தை பல நாடு­கள் தடை செய்­துள்ள நிலை­யில், இந்­திய அரசு மட்­டும் ஏன் தாம­திக்­கிறது என்று டுவிட்­டர் பதிவு ஒன்­றில் அவர் கேள்வி எழுப்­பி­யுள்­ளார்.

பல வெளி­நாட்டு விமா­னங்­கள் டெல்­லி­யில் தரை­யி­றங்­கு­வ­தா­கச் சுட்­டிக்­காட்டி உள்ள அவர், இத­னால் பாதிப்­பு­கள் ஏற்­படும் முன்பே அந்த விமா­னங்­க­ளுக்கு தடை­விதிக்க வேண்­டும் என்று கேட்­டுக் கொண்­டுள்­ளார்.

ஏற்கெனவே மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேயும் இதே கோரிக்கையை கடந்த வார இறுதியில் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் வலியுறுத்தி இருந்தார்.

'ஓமிக்ரான்' அச்சத்துக்கு மத்தியில் நாடு முழுவதும் கொரோனா பரிசோதனை தீவிர மடைந்துள்ளது. டெல்லியில் பேருந்து நிலையம் அருகே சுகாதாரத் துறை ஊழியர், இளையர் ஒருவரின் மாதிரியை சேகரிக்கிறார்.

படம்: ராய்ட்டர்ஸ்