கனமழை: கேரளாவுக்கு மீண்டும் எச்சரிக்கை

கனமழை: கேரளாவுக்கு மீண்டும் எச்சரிக்கை

1 mins read
811f9eae-e803-47db-960a-fc0d7bae9ac8
-

திரு­வ­னந்­த­புரம்: வங்­கக்­க­ட­லில் உரு­வான புதிய காற்­ற­ழுத்த தாழ்வு நிலை­யா­னது புதன்­கி­ழ­மைக்­குள் மேலும் வலுப்­பெற வாய்ப்­புள்­ளது என்­றும் இதன் கார­ண­மாக கேர­ளா­வில் கன­மழை பெய்­யக்­கூ­டும் என்­றும் இந்­திய வானிலை ஆய்வு மையம் தெரி­வித்­துள்­ளது.

இதை­ய­டுத்து கோழிக்­கோடு, வய­நாடு, மலப்­பு­ரம் உள்­பட 12 மாவட்­டங்­க­ளுக்கு கன­ம­ழைக்­கான மஞ்­சள் எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது.

கடற்­ப­கு­தி­களில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்­டர் வேகத்­தில் காற்று வீசும் என்று கணிக்­கப்­பட்­டுள்­ளதை அடுத்து மீன­வர்­கள் கட­லுக்­குள் செல்ல வேண்­டாம் என்று அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

மேலும், இம்­மா­வட்­டங்­களில் தாழ்­வான பகு­தி­களில் வசிப்­போர், பாது­காப்­பான இடங்­க­ளுக்­குச் செல்­லு­மாறு அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ள­னர்.

அடுத்த ஓரிரு தினங்­க­ளுக்கு கடல் சீற்­றத்­து­டன் காணப்­படும் என்­றும் ஆறு­கள், கால்­வாய்­க­ளின் அருகே செல்ல வேண்­டாம் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அங்கு தொடர்ந்து மழை பெய்து வருகிறது.