புதுடெல்லி: புதிய வகை ஓமிக்ரான் தொற்று பாதிப்பு உள்ள நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகள் அனைவருக்கும் கடுமையான புதிய கட்டுப்பாடுகள் அனைத்து விமான நிலையங்களிலும் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தன.
தென்னாப்பிரிக்கா, சீனா, நியூசிலாந்து, ஹாங்காங், பிரிட்டன், பிரேசில், பங்ளாதேஷ், போட்ஸ்வானா, மொரிஷியஸ், ஸிம்பாப்வே, சிங்கப்பூா், இஸ்ரேல் உள்ளிட்ட 12 நாடுகளில் இருந்து வருவோருக்கு விமான நிலைய வளாகத்திலேயே ஆர்டிபிசிஆர் பரிசோதனை கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பரிசோதனை முடிவுகளைப் பெறும் வரை விமான நிலைய வளாகத்திலேயே பயணிகளைத் தனிமைப்படுத்த வேண்டும்.
தொற்று இல்லை என பரிசோதனை முடிவில் தெரியவந்தாலும் பயணிகள் தங்களை ஏழு நாள்கள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். அதன்பின்னா் 8ஆவது நாளில் மீண்டும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்படும்.
அப்போதும் தொற்றில்லை என முடிவு வந்தால், அதற்கு அடுத்த ஏழு நாள்களுக்கு அவா்களது உடல்நிலையைக் கண்காணிக்க வேண்டும்.
இந்திய விமான நிலையங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள 12 நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு மகாராஷ்டிர மாநிலத்தில் கடுமையான கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன.
இவர்கள் ஏழு நாள் கட்டாயத் தனிமைப்படுத்தலில் வைக்கப்படுவர். 2வது நாள், 4வது நாள், 7வது நாள் என மூன்று முறை ஆர்டிபிசிஆர் பரிசோதனை எடுக்கப்படும். அதில் தொற்று இல்லை என உறுதியானாலும் 14 நாட்கள் வீட்டு தனிமைப்படுத்துதலில் வைக்கப்
படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளின் பயணிகளுக்கு கட்டாயப் பரிசோதனை

