புதுடெல்லி: மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு நேற்று முன்தினம் மத்திய உள்துறை இணையமைச்சா் நித்யானந்த் ராய் எழுத்துபூா்வமாகப் பதிலளித்தார்.
"2017ஆம் ஆண்டில் 1,33,049 போ், 2018ல் 1,34,561 போ், 2019ல் 1,44,017 போ், 2020ல் 85,248 போ், இந்த ஆண்டு செப்டம்பர் 30 வரை 1,11,287 போ் என மொத்தம் 6 லட்சத்துக்கும் மேற்பட்டவா்கள் இந்திய குடியுரிமையை துறந்துள்ளனா். ஐந்தாண்டுகளில் வெளிநாடுகளைச் சோ்ந்த 10,645 போ் இந்தியக் குடியுரிமைக்கு விண்ணப்பித்தனா். அவா்களில் 4,177 பேருக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் 1,33,83,718 இந்தியா்கள் வசிக்கின்றனா்," என்றார் அவர்.