இந்தியாவில் பரிசோதனைக்கு வெவ்வேறு கட்டணம்

புது­டெல்லி: கொவிட்-19 தொற்று அபா­ய­முள்ள நாடு­களில் இருந்து இந்­தியா வரும் பய­ணி­கள் விமான நிலை­யங்­களில் தரை­யி­றங்­கி­ய­வுடன் கொவிட்-19 பரி­சோ­தனை செய்­து­கொள்ள நீண்ட வரி­சை­யில் நிற்க வேண்­டி­யி­ருக்­கும். ஆனால், ஆர்­டி­பி­சி­ஆர் பரி­சோ­த­னைக்­காக நீண்ட வரி­சை­யைத் தவிர்க்க கூடு­தல் கட்­ட­ணம் செலுத்­து­வது ஒரு வழி.

விரைவு ஆர்­டி­பி­சி­ஆர் பரி­சோ­தனை, வழக்­க­மான ஆர்­டி­பி­சி­ஆர் பரி­சோ­தனை என இரு வகை பரி­சோ­த­னை­கள் உள்­ளன.

விரைவு ஆர்­டி­பி­சி­ஆர் பரி­சோ­தனை முடி­வு­களை ஒரு மணி­ நேரத்­தி­லேயே தெரிந்­து­கொள்­ள­லாம். மாறாக, வழக்­க­மான ஆர்­டி­பி­சி­ஆர் பரி­சோ­தனை முடிவு வெளி­வர குறைந்­த­பட்­சம் நான்கு மணி­நே­ரம் ஆகும்.

ஆனால், பரி­சோ­தனை முடி­வு­களை விரை­வில் தெரிந்­து­கொள்ள கூடு­தல் கட்­ட­ணம் செலுத்த வேண்­டும். விரைவு ஆர்­டி­பி­சி­ஆர் பரி­சோ­த­னைக்­கான கட்­ட­ணம் ரூ.3,900. வழக்­க­மான ஆர்­டி­பி­சி­ஆர் பரி­சோ­த­னைக்­கான கட்­ட­ணம் ரூ.500. நான்கு பேர் கொண்ட குடும்­ப­மா­கப் பய­ணம் செய்­வோர் விரைவு பரி­சோ­த­னைக்கு ரூ.15,600 அல்­லது வழக்­க­மான பரி­சோ­த­னைக்கு ரூ.2,000 செலுத்த வேண்­டும்.

ஆனால், ஒவ்­வொரு விமான நிலையத்­தி­லும் இக்­கட்­ட­ணம் மாறு படக்­கூ­டும். ரூ.900ஆக இருந்த ஆர்­டி­பி­சி­ஆர் பரி­சோ­த­னைக் கட்­ட­ணத்தை டிசம்­பர் 1 முதல் ரூ.700ஆகக் குறைத்­துள்­ள­தாக சென்னை விமான நிலை­யம் நேற்று முன்­தி­னம் தெரி­வித்­தது.

தொற்று அபா­ய­முள்ள நாட்­டில் இருந்து இந்­தியா வரு­ப­வர், விமான நிலை­யத்­தில் பரி­சோ­தனை முடிந்­த­வு­டன் ஓரிரு வாரத்­திற்கு இல்­லத் தனிமை உத்­த­ரவை நிறை­வேற்ற வேண்­டும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!