தேங்காய் உடையாமல் சாலை சிதறியது

1 mins read
1d9c7c3b-d14b-4341-b808-37de56e7ef7e
பாஜக எம்.எல்.ஏ. சுசி சௌத்ரி, சாலையில் போக்குவரத்தை தொடங்கிவைக்க தேங்காயை அடித்து உடைத்தார். படம்: இந்திய ஊடகம் -

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம், பிஜ்நூர் எனும் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட சாலையைத் திறந்துவைக்கும் விழாவில் பாஜக எம்.எல்.ஏ. சாலையில் தேங்காயை உடைத்தார். ஆனால், தேங்காய் உடையாமல் சாலை சிதறியதுதான் வினோதம்.

பிஜ்நூர் பகுதியில் ரூ.1.16 கோடி மதிப்பீட்டில் புதிதாக சாலை அமைக்கப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற சாலை திறப்பு விழாவில் பாஜக எம்.எல்.ஏ. சுசி சௌத்ரி, சாலையில் போக்குவரத்தை தொடங்கிவைக்க தேங்காயை அடித்து உடைத்தார்.

அப்போது தேங்காய் உடையாமல், புதிதாக அமைக்கப்பட்ட சாலை பெயர்ந்து சிதறியது. சாலையின் தரம் மோசமானதாக இருப்பதை இச்சம்பவம் அம்பலமாக்கியது.

அங்கு கூடியிருந்த மக்கள் பலரும் இச்சம்பவத்தால் பாஜக அரசைக் கடுமையாக விமர்சித்தனர். தேர்தல் நெருங்குவதால் அவசர அவசரமாக சாலை அமைத்து கொள்ளையடிப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.