முசாபர்நகர்: மாணவிகளுக்கு உணவில் போதை மருந்து கலந்துகொடுத்து பாலியல் கொடுமை செய்ததாக பள்ளி முதல்வர் கைது செய்யப்பட்டுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலத்தின் முசாபர் நகரில் உள்ள சூர்யதேவ் பள்ளியில்தான் இந்தக் கொடூரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அந்த மாணவிகள் பயிலும் சூர்யதேவ் பள்ளிக்கு அருகேயுள்ள ஜிஜிஎஸ் இன்டர்நேஷனல் பள்ளியில் நவம்பர் 19ஆம் தேதி பயிற்சித்தேர்வு நடைபெற்றது. இந்நிலையில் தேர்வுக்கு முதல்நாள் 17 மாணவிகளை மட்டும் சூர்யதேவ் பள்ளியில் இரவில் தங்கவைத்தனர். அவர்களுக்கு இரவு உணவில் போதைமருந்து கலந்துகொடுத்து பாலியல் கொடுமை நடந்ததாக புகார் அளிக்கப்பட்டது. ஆனால் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து அத்தொகுதி எம்எல்ஏ பிரமோத் உத்வல் தலையீட்டின் பேரில் ஜிஜிஎஸ் பள்ளி முதல்வர் யோகேஷ் குமார் கைதுசெய்யப்பட்டார். சூர்யதேவ்பள்ளி முதல்வர் அர்ஜுன்சிங் தேடப்பட்டு வருகிறார்.
உணவில் போதை மருந்து கலந்து மாணவிகளிடம் பாலியல் வன்கொடுமை
1 mins read
-

