'இந்தியில் பேச வேண்டாம் ஆங்கிலத்தில் பேசுங்கள்'

'இந்தியில் பேச வேண்டாம் ஆங்கிலத்தில் பேசுங்கள்'

1 mins read
20026dab-15e9-4065-8a54-f358a6cd5de6
-

சென்னை: சுகா­தார அமைச்­சின் ஆலோ­ச­னைக் கூட்­டத்­தில் கலந்து கொண்ட எம்­பிக்­கள் அனை­வ­ரும் இந்­தி­யில் மட்­டுமே பேசி­ய­தற்கு மதி­முக பொதுச்­செ­ய­லா­ள­ரும் எம்­பி­யு­மான வைகோ கண்­ட­னம் தெரி­வித்­தார்.

இதை­ய­டுத்து கூட்­டத்­தில் பங்­கேற்ற அனை­வ­ரை­யும் ஆங்­கி­லத்­தில் பேசு­மாறு சுகா­தார அமைச்­சர் மன்­சுக் மாண்­டவியா கேட்­டுக்கொண்­டார்.

நாடா­ளு­மன்ற குளிர்­கால கூட்­டத்­தொ­டர் நடை­பெற்று வரு­கிறது. இதை­யொட்டி சுகா­தார அமைச்­சர் தலை­மை­யில் நேற்று முன்­தி­னம் அந்த அமைச்­சின் ஆலோ­ச­னைக் கூட்­டம் நடை­பெற்­றது.

இதில் மதி­முக எம்பி வைகோ பங்­கேற்­றார்.

கூட்­டம் தொடங்­கி­யது முதல் அமைச்­சர், அமைச்சு அதி­கா­ரி­கள், எம்­பிக்­கள் என அனை­வ­ரும் இந்­தி­யில் மட்­டுமே பேசி­ய­தா­கத் தெரி­கிறது. அப்­போது குறுக்­கிட்ட வைகோ, தமக்கு இந்தி மொழி தெரி­யாத நிலை­யில் மற்­ற­வர்­கள் பேசு­வதை எப்­ப­டிப் புரிந்து கொள்­வது எனக் கேள்வி எழுப்­பி­னார்.

இதையடுத்து பேசிய அமைச்சர், வழக்கமாக வரக்கூடிய மொழி பெயர்ப்பாளர் பணிக்கு வரவில்லை என்று கூறியதுடன், அனைவரும் ஆங்கிலத்தில் பேசுமாறு கேட்டுக் கொண்டார்.

அதன் பின்­னர் அனை­வ­ரும் ஆங்­கி­லத்­தில் பேசி­னர். பின்னர் வைகோ நன்றி தெரிவித்தார்.