இந்தியா: வழக்கமான அனைத்துலக விமான சேவைகள் ஜனவரி 31 வரை ரத்து

இந்தியா: வழக்கமான அனைத்துலக விமான சேவைகள் ஜனவரி 31 வரை ரத்து

1 mins read
0fcf47ae-fd71-4414-8400-88ecab324d19
படம்: ராய்ட்டர்ஸ் -
Google News Preferred Icon

வழக்கமான அனைத்துலக விமானப் போக்குவரத்து சேவைகளை 2022 ஜனவரி 31ஆம் தேதிவரை நிறுத்தி வைப்பதாக இந்திய சிவில் விமானப் போக்குவரத்து தலைமை இயக்ககம் அறிவித்து இருக்கிறது.

முன்னதாக, இம்மாதம் 15ஆம் தேதியிலிருந்து அனைத்துலக விமான சேவைகள் வழக்கம்போல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால், 'ஓமிக்ரான்' கிருமி அச்சுறுத்தல் காரணமாக, அதனைத் தள்ளிவைப்பதாக அடுத்த ஒரு வாரத்திலேயே அறிவிப்பு வெளியானது.