தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சாலை விபத்துகளில் 48,000 பேர் மரணம்

1 mins read
d3168555-52a7-4f68-a4f0-b1af430c61fe
-

புது­டெல்லி: விரை­வுச்­சா­லை­கள் உள்­ளிட்ட தேசிய நெடுஞ்­சா­லை­களில் சென்ற ஆண்டு நிகழ்ந்த விபத்­து­களில் மொத்­தம் 47,894 பேர் உயி­ரி­ழந்­து­விட்­ட­தாக இந்­திய சாலைப் போக்­கு­வ­ரத்து, நெடுஞ்­சா­லை­கள் துறை அமைச்­சர் நிதின் கட்­காரி தெரி­வித்­துள்­ளார்.

முந்­திய 2019ஆம் ஆண்­டில் இந்த எண்­ணிக்கை 53,8752ஆக இருந்­தது.

வாகன வடி­வ­மைப்பு, வாக­னத்­தின் நிலை, சாலைப் பொறி­யி­யல், அதி­வே­கம், போதை­யில் வாக­னம் ஓட்­டு­தல், எதிர்த்­தி­சை­யில் வாக­னம் ஓட்­டு­தல், சிவப்பு விளக்கை மீறிச் செல்­லு­தல், கைபே­சி­யில் பேசி­ய­ப­டியே வாக­னம் ஓட்­டு­தல் போன்­ற­வையே தேசிய நெடுஞ்­சா­லை­களில் விபத்து நேரிட முக்கியக் கார­ணங்­கள் என்று அமைச்­சர் கட்­காரி பட்­டி­ய­லிட்­டார்.

தன்­னிச்­சை­யான சாலைப் பாது­காப்பு வல்­லு­நர்­க­ளைக் கொண்டு, பாது­காப்­புத் தணிக்­கை­கள் மூல­மாக சாலைப் பாது­காப்பை மேம்­ப­டுத்­து­வ­தற்­கான வழி­காட்டி நெறி­மு­றை­க­ளைத் தமது அமைச்சு வெளி­யிட்­டுள்­ள­தாக அவர் கூறி­னார்.

டெல்லி, மத்­தி­யப் பிர­தே­சம், ஒடிசா, ராஜஸ்­தான், உத்­த­ரப் பிர­தே­சம் ஆகிய ஐந்து மாநி­லங்­களில் வாக­னம், கைபேசி, ஆவணங்கள் குறித்த திருட்­டுப் புகார்­களுக்கு இணை­யம் வழி­யாக முதல் தக­வல் அறிக்கை தாக்­கல் செய்­யும் வசதி ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தா­க­வும் திரு கட்­காரி குறிப்­பிட்­டார்.