இந்திய கிரிக்கெட் அணித்தலைவர், தமக்கு மகள் பிறந்ததை டுவிட்டர் மூலமாக அறிவித்ததே இவ்வாண்டில் அதிக விருப்பக்குறிகளை (லைக்) பெற்ற டுவீட் என்று அந்தச் சமூக ஊடகம் தெரிவித்துள்ளது. கோஹ்லி - நடிகை அனுஷ்கா சர்மா இணையருக்கு கடந்த ஜனவரியில் பெண் குழந்தை பிறந்தது. தங்கள் மகளுக்கு 'வாமிகா' என்று அவர்கள் பெயர் சூட்டியுள்ளனர். தங்களுக்குக் குழந்தை பிறந்ததை 2021 ஜனவரி 11ஆம் தேதி டுவிட்டர் வாயிலாக கோஹ்லி அறிவித்தார். அப்பதிவிற்கு உலகம் முழுதுமிருந்தும் 539,000க்கும் மேற்பட்டோர் விருப்பக்குறியிட்டனர். முதல் குழந்தை பிறக்கும் நேரத்தில் மனைவியின் அருகே இருக்க வேண்டும் என்பதற்காக இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி முடிந்ததும் கோஹ்லி இந்தியா திரும்பியது குறிப்பிடத்தக்கது.
படம்: டுவிட்டர்/அனுஷ்கா சர்மா

