புதுடெல்லி: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து சிறப்பு மீட்பு விமானம் மூலம் இந்துக்களும் சீக்கியர்களுமாக 110 பேர் நேற்று புதுடெல்லிக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களில் இருநாட்டுக் குடிமக்களும் அடங்குவர். ஆப்கானில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க சீக்கியக் கோவிலில் வைக்கப்பட்டிருந்த சீக்கியர்களின் புனித நூலான 'குரு கிரந்த சாகிப்' மூன்றும், ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த அசமாய் கோவிலில் இருந்து ராமாயணம், மகாபாரதம், பகவத் கீதை உள்ளிட்ட இந்து சமய நூல்களும் அவ்விமானத்தில் எடுத்து வரப்பட்டன. இவர்களுடன் சேர்த்து, இந்தியா இதுவரை 675 பேரை ஆப்கானில் இருந்து மீட்டு வந்துள்ளது. ஆப்கானிலேயே இன்னுமுள்ள இந்தியர்களுடன் இந்திய வெளியுறவு அமைச்சு தொடர்பில் இருப்பதாக வெளியுறவு இணையமைச்சர் வி.முரளீதரன் சென்ற வாரம் நாடாளுமன்றத்தில் தெரிவித்து இருந்தார்.
ஆப்கானிலிருந்து 110 பேர் மீட்பு
1 mins read
-

