'நான் என்ன உண்ண வேண்டும் என்பதை முடிவுசெய்ய நீங்கள் யார்?'

'நான் என்ன உண்ண வேண்டும் என்பதை முடிவுசெய்ய நீங்கள் யார்?'

2 mins read
b4bac24f-c8c1-48a0-b2c7-7f6742229f1d
-

அக­ம­தா­பாத்: சாலை­யோ­ர­மா­கத் தள்­ளு­வண்­டி­களில் அசைவ உணவு விற்­பனை செய்த 25 பேரின் வண்­டி­களை அக­ம­தா­பாத் மாந­க­ராட்சி பறி­மு­தல் செய்­தது. அதை எதிர்த்து, அந்த வணி­கர்­கள் அனை­வ­ரும் ஒன்­றாக குஜ­ராத் உயர் நீதி­மன்­றத்தை நாடி­னர்.

இவ்விவ­கா­ரத்­தில் மாந­க­ராட்­சி­யின் நட­வ­டிக்­கையை நீதி­மன்­றம் கடு­மை­யா­கச் சாடி­யது.

"இதில் உங்­க­ளுக்கு என்ன பிரச்­சினை? உங்­க­ளுக்கு அசைவ உணவு பிடிக்­க­வில்லை எனில், அது உங்­க­ளது கண்­ணோட்­டம். வீட்­டிற்கு வெளியே நான் என்ன சாப்­பிட வேண்­டும் என்­பதை முடிவு­செய்ய நீங்­கள் யார்? மாந­க­ராட்சி ஆணை­யர் என்ன செய்து கொண்­டி­ருக்­கி­றார்? குறிப்­பிட்­ட­வர்­கள்­மீது பாகு­பாடு காட்ட உங்­க­ளுக்கு என்ன துணிச்­சல்?" என்று சர­மாரி­யா­கச் சாடி­னார் நீதி­பதி பிரேன் வைஷ்­ணவ்.

கரும்­புச்­சாறு குடித்­தால் நீரி­ழிவு வரும் அல்­லது காப்பி குடிப்­பது உடல்­ந­லத்­திற்கு நல்­ல­தல்ல என்று நாளை சொல்­வீர்­களா என்­றும் அவர் கேட்­டார். அதி­கா­ரத்­தில் இருப்­ப­வர்­க­ளின் விருப்­பத்­திற்­காக இப்­படி திடீர் திடீ­ரென நடவடிக்கை எடுப்­ப­தை­யும் அவர் குறை­கூ­றி­னார்.

முன்­ன­தாக, தள்­ளு­வண்­டி­களில் அசைவ உணவு விற்­பது சமய உணர்­வு­க­ளைப் புண்­ப­டுத்­து­வ­தாக உள்­ளது என்று ராஜ்­கோட் நகர மேயர் கடந்த மாதம் தெரி­வித்து இருந்­தார்.

வழக்­கின் இரண்­டா­வது அமர்­வில் மாந­க­ராட்சி சார்­பில் முன்­னி­லை­யான வழக்­க­றி­ஞர், அசைவ உணவு விற்­ற­தற்­காக அந்த வணி­கர்­க­ளின் தள்­ளு­வண்­டி­கள் பறி­முதல் செய்­யப்­ப­ட­வில்லை என்­றும் போக்­கு­வ­ரத்­திற்­கும் நடை­யர்­க­ளுக்­கும் இடை­யூ­றாக இருந்­த­தால்­தான் அந்­ந­ட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டது என்­றும் சொன்­னார்.

ஆனால், அவ­ரது விளக்­கத்தை ஏற்க மறுத்த நீதி­பதி, "நேர்­மை­யாக நடந்­து­கொள்­ளுங்­கள். வஸ்த்­ரா­பூர் ஏரி­யைச் சுற்றி பல­ரும் முட்­டை­யும் ஆம்­லெட்­டும் விற்­கின்­ற­னர். ஆட்சி­யில் இருக்­கும் கட்சி 'முட்டை விற்­கக்­கூ­டாது' என்று கூறி­னால், ஒரே இர­வில் அந்­தக் கடைக்­கா­ரர்­களை எல்­லாம் அப்­பு­றப்­ப­டுத்­தி­வி­டு­வீர்­களா?" என்று காட்­ட­மா­கக் கேட்­டார்.

மனு­தா­ரர்­க­ளான வணி­கர்­கள் அணு­கும் பட்­சத்­தில், 24 மணி நேரத்­திற்­குள் அவர்­க­ளது பொருள்­களை­யும் வண்­டி­க­ளை­யும் ஒப்­ப­டைத்­து­விட வேண்­டும் என்று மாந­க­ராட்­சிக்கு நீதி­பதி உத்­த­ர­விட்­டார். அத­னைத் தொடர்ந்து, வணி­கர்­களின் மனு­வை­யும் அவர் தள்­ளு­படி செய்­தார்.