முடிவுக்கு வந்த போராட்டம்: ஊர் திரும்பும் விவசாயிகள்

முடிவுக்கு வந்த போராட்டம்: ஊர் திரும்பும் விவசாயிகள்

2 mins read
ca6d31f4-f0f7-4912-9e56-7d9ae55ea3d9
-

டெல்லி புறநகர்ப் பகுதிகளில் விவசாயிகள் ஆடிப் பாடிக் கொண்டாட்டம்

புது­டெல்லி: புதிய வேளாண் சட்­டங்­களை மத்­திய அரசு திரும்­பப் பெற்­ற­தை­ய­டுத்து, போராட்­டக் களத்­தில் உள்ள விவ­சா­யி­கள் சுமார் ஓராண்டு காலத்­துக்­குப் பிறகு சொந்த ஊர் திரும்ப முடிவு செய்­துள்­ள­னர்.

இதை­ய­டுத்து டெல்­லி­யின் புற­ந­கர்ப் பகு­தி­களில் விவ­சா­யி­கள் நேற்று வெற்­றிக் கொண்­டாட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர்.

புதிய வேளாண் சட்­டங்­க­ளுக்கு கடும் எதிர்ப்பு தெரி­வித்த விவ­சா­யி­கள் கடந்த ஓராண்­டுக்­கும் மேலாக தொடர் போராட்­டங்­களை நடத்தி வந்­த­னர். குறிப்­பாக, பஞ்­சாப், ஹரி­யானா, உத்­த­ரப் பிர­தேச மாநில விவ­சா­யி­கள் ஆயி­ரக்­க­ணக்­கா­னோர் டெல்­லியை முற்­று­கை­யிட்டு போராட்­டம் நடத்தி வந்­த­னர். நூற்­றுக்­க­ணக்­கான விவ­சா­யி­கள் ஊர் திரும்ப மறுத்து, டெல்லி புற­ந­கர்ப் பகு­தி­களில் உள்ள நெடுஞ்­சா­லை­களை மறித்து, தற்­கா­லிக கூடா­ரங்­கள் அமைத்து, அங்­கேயே தங்­கி­விட்­ட­னர்.

சிங்கு, திக்ரி, காஜிப்­பூர் ஆகிய மூன்று இடங்­களும் கடந்த பல மாதங்­க­ளாக அக­தி­க­ளுக்­கான முகாம்­க­ளைப் போல் காட்சி அளித்­தன. இந்­நி­லை­யில், மத்­திய அரசு புதிய வேளாண் சட்­டங்­க­ளைத் திரும்­பப் பெற்­ற­தால், விவ­சா­யி­களும் போராட்­டத்தை முடி­வுக்­குக் கொண்டு வந்­துள்­ள­னர்.

நேற்று காலை முதல் தாங்­கள் அமைத்த கூடா­ரங்­க­ளைப் பிரித்­தெ­டுத்து, இது­நாள் வரை பயன்­ப­டுத்­திய பொருள்­க­ளு­டன் டிராக்­ட­ரில் ஏறி அவர்­கள் சொந்த ஊர்­க­ளுக்­குத் திரும்­பிச் செல்­லத் தொடங்­கி­னர்.

போராட்­டக் களத்­தில் உள்ள அனை­வ­ரும் கிளம்­பிச் செல்ல நான்­கைந்து நாள்­கள் ஆகும் என விவ­சாய சங்­கப் பிர­மு­கர்­கள் தெரி­வித்­த­னர்.

முன்­ன­தாக, தங்­கள் வெற்­றி­யைக் கொண்­டா­டும் வித­மாக, விவ­சா­யி­கள் பலர் ஆடி ­பாடி மகிழ்ந்­த­னர்.

சிங்கு, திக்ரி, காஜிப்­பூர் ஆகிய மூன்று இடங்­களும் விவ­சா­யி­க­ளின் இந்­தக் கொண்­டாட்­டத்­தால் களை­கட்­டின. காலை 8.30 மணிக்கு திரண்ட விவ­சா­யி­கள் சுமார் ஒரு­மணி நேரத்­துக்­கும் மேலாக நட­ன­மா­டி­னர். பின்­னர் தேச பக்­திப் பாடல்­க­ளைப் பாடி­னர்.

இதை­ய­டுத்து பஞ்­சாப் மாநில விவ­சா­யி­கள் டிராக்­டர்­களில் நீண்ட அணி­வ­குப்பு பேர­ணி­யைப் போன்று புறப்­பட்­டுச் சென்­ற­னர். திக்ரி பகு­தி­யில் விவ­சாய சங்­கத் தலை­வர் ராகேஷ் திகா­யத் விவ­சா­யி­க­ளுக்கு வாழ்த்துகூறி வழி­ய­னுப்பி வைத்­தார்.

டெல்லி புற­ந­கர் பகு­தி­களில் இருந்து விவ­சா­யி­கள் புறப்­ப­டு­வ­தால் 380 நாள்­க­ளுக்குப் பிறகு தேசிய நெடுஞ்­சா­லை­களில் இயல்­பு­நிலை திரும்­பத் தொடங்கி உள்­ளது.