'விபத்து குறித்து மக்கள் ஊகங்களை பரப்ப வேண்டாம்'

'விபத்து குறித்து மக்கள் ஊகங்களை பரப்ப வேண்டாம்'

1 mins read
200f5d51-35f2-4623-bbbd-63cc1dc7faee
-

புது­டெல்லி: ஹெலி­காப்­டர் விபத்து தொடர்­பாக பொது­மக்­கள் உறுதி செய்­யப்­ப­டாத தக­வல்­கள், ஊகங்­களை பரப்­பக்­கூ­டாது என்று இந்­திய விமா­னப்­படை வலி­யு­றுத்தி உள்­ளது.

விபத்து குறித்து விசா­ரணை நடந்து வரும் நிலை­யில், இறந்த முப்­ப­டைத் தலைமை தள­ப­தி­யின் கண்­ணி­யம் காக்­கப்­பட வேண்­டும் என விமா­னப்­படை கேட்­டுக் கொண்­டுள்­ளது.

விசா­ரணை விரைந்து முடிக்­கப்­பட்டு உண்­மை­கள் வெளி­வ­ரும் என்­றும் விமா­னப்­படை வெளி­யிட்ட அறிக்­கை­யில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இதற்­கி­டையே, ராணுவ ஹெலி­காப்­டர் விபத்­தில் சிக்­கு­வ­தற்கு முன்­னர், கடைசி நொடி­களில் அதை காணொ­ளி­யா­கப் பதிவு செய்த இரு­வ­ரும் எந்த விசா­ர­ணைக்­கும் ஒத்­து­ழைக்­கத் தயார் என கூறி உள்­ள­னர்.

கோவை­யைச் சேர்ந்த புகைப்­படக்­கா­ரர் ஜோ பால், அவ­ரு­டைய நண்­பர் நாசர் ஆகிய இரு­வ­ரும் ஹெலி­காப்­டர் விழுந்து நொறுங்­கும் முன் அதைப் படம் பிடித்­துள்­ள­னர்.

இதே­போல் அப்­ப­கு­திக்கு வந்­தி­ருந்த சுற்­றுலாப் பய­ணி­களும் கைபே­சி­யில் ஹெலி­காப்­ட­ரைப் படம் எடுத்­த­னர்.

இந்­நி­லை­யில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய ஜோ பால், குன்­னூ­ருக்கு குடும்­பத்­து­டன் சென்­றி­ருந்­த­போது, காட்­டேரி பகு­தி­யில், ஹெலி­காப்­டர் ஒன்று தாழ்­வா­கப் பறப்­ப­தைக் கண்டு அதை காணொ­ளி­யா­கப் பதிவு செய்­த­தா­கக் குறிப்­பிட்­டார்.

இந்­தக் காணொளி தொடர்­பாக சிலர் தங்­களை தவ­றாக விமர்­சிப்­பது வருத்­தம் அளிப்­ப­தா­கக் குறிப்­பிட்ட அவர், காவல் ஆணை­ய­ரி­டம் உரிய விளக்­கங்­களை அளித்­துள்­ள­தா­கத் தெரி­வித்­தார். விபத்து குறித்த விசா­ர­ணைக்கு இந்­தக் காணொ­ளிப் ப­திவு உத­வும் என எதிர்­பார்ப்­ப­தா­க­வும் அவர் கூறி­னார். இதற்­கி­டையே விபத்து நடந்த பகு­தி­யில் இருந்து ராணு­வத் துப்­பாக்­கி­கள் பல மீட்­கப்­பட்­ட­தாக ராணு­வத் தரப்­பில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.