மரடோனா கையெழுத்திட்ட கைக்கடிகாரத்தை திருடிய ஆடவர் கைது

மரடோனா கையெழுத்திட்ட கைக்கடிகாரத்தை திருடிய ஆடவர் கைது

1 mins read
5f1a7831-3a05-4ee0-8e3f-19f3f8530fb0
திருடப்பட்ட கைக்கடிகாரம், கைதான ஆடவர். படங்கள்: ஊடகம் -

கௌஹாத்தி: காலஞ்­சென்ற காற்­பந்து வீரர் மர­டோ­னா­ கையெழுத்திட்ட கைக்­க­டிக்­கா­ரத்தை திரு­டிய அசாம் மாநில ஆட­வரை காவல்­துறை கைது செய்­துள்­ளது.

இந்த திருட்­டுச் சம்­ப­வம் துபா­யில் அரங்­கே­றி­யது தெரி­ய­வந்­துள்­ளது.

துபா­யில் உள்ள விற்­பனை நிலை­யம் ஒன்­றில் பாரம்­ப­ரிய பொருள்­கள் விற்­கப்­ப­டு­கின்­றன. அங்கு மர­டோ­னா­வுக்­குச் சொந்­த­மான பாரம்­ப­ரிய கைக்­க­டி­கா­ரம் ஒன்­றும் காட்­சிக்கு வைக்­கப்­பட்டு இருந்­தது. அதில் மர­டோனா கையெ­ழுத்­திட்­டுள்­ளார் என்­பது கூடு­தல் சிறப்­பம்­சம்.

இந்­நி­லை­யில் கடந்த நான்கு மாதங்­க­ளுக்கு முன்பு அந்­தக் கைக்­க­டி­கா­ரம் திடீ­ரென மாய­மா­னதால் பரபரப்பு ஏற்பட்டது.

இது­கு­றித்து துபாய் காவல்­துறை நடத்­திய தீவிர விசா­ர­ணை­யின்­போது, இந்­தி­யா­வைச் சேர்ந்த வாசித் ஹுசைன் என்­ப­வர் அந்தக் கைக்கடி­கா­ரத்தை திரு­டி­யது தெரி­ய­வந்­தது.

எனி­னும் அவர் இந்­தி­யா­வுக்கு தப்­பி­யோ­டி­விட்­டதை அறிந்த துபாய் காவல்­துறை, இந்­திய புல­னாய்­வுத் துறைக்குத் தக­வல் தெரி­வித்­தது.

இதை­ய­டுத்து அசாம் காவல்­துறைக்குத் தக­வல் தெரி­விக்­கப்­பட, சிவ­சா­கர் பகு­தி­யில் பதுங்கி இருந்த வாசித் ஹுசைன் கைது செய்­யப்­பட்­டார்.

இத்­த­க­வலை அம்­மா­நில முதல்­வர் ஹிமாந்தா பிஸ்­வாஸ் தமது டுவிட்­டர் பக்­கத்­தில் தெரி­வித்­துள்­ளார். திரு­டப்­பட்ட கைக்­க­டி­கா­ரம் மீட்­கப்­பட்­டது மர­டோனாவின் தீவிர ரசி­கர்­க­ளுக்கு மகிழ்ச்சி அளித்­துள்­ளது.