பிரபஞ்ச அழகியின் ஆடையை வடிவமைத்த திருநங்கை!

பிரபஞ்ச அழகியின் ஆடையை வடிவமைத்த திருநங்கை!

1 mins read
cf345473-b6c2-4b95-a900-865be1f28f27
'பிரபஞ்ச அழகி' ஹர்னாஸ் சந்துவும் அவர் அணிந்துள்ள ஆடையை வடிவமைத்த சைஷா ஷிண்டேவும். படம்: இந்திய ஊடகம் -

இவ்வாண்டிற்கான பிரபஞ்ச அழகியாக (Miss Universe) மகுடம் சூடியுள்ளார் இந்தியாவின் 21 வயது ஹர்னாஸ் சந்து.

இஸ்ரேலில் இன்று திங்கட்கிழமை நடந்த அப்போட்டியின் இறுதிச் சுற்றில் ஹர்னாஸ் அணிந்திருந்த மின்னும் ஆடை கண்டோரை வெகுவாகக் கவர்ந்தது.

அந்த முழுநீள ஆடையை வடிவமைத்தவர் ஒரு திருநங்கை என்பது தெரியவந்துள்ளது.

சைஷா ஷிண்டே என்ற இந்த ஆடை வடிவமைப்பாளர், முதலில் ஸ்வப்னில் ஷிண்டேவாக இருந்து, பின்னர் திருநங்கையாக மாறியவர்.

கரீனா கபூர், ஷ்ரதா கபூர், அனுஷ்கா கபூர் போன்ற முன்னணி இந்தித் திரையுலக நட்சத்திரங்கள், இவர் வடிவமைத்த ஆடைகளை அணிந்துள்ளனர்.

பிரியங்கா சோப்ரா நடித்த 'ஃபேஷன்' உள்ளிட்ட இந்திப் படங்களிலும் இவர் ஆடை வடிவமைப்பாளராகப் பணியாற்றியுள்ளார்.

ஹர்னாஸ் சந்து 'பிரபஞ்ச அழகி'யாகத் தேர்வுசெய்யப்பட்டபின் அது குறித்து தமது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் சைஷா.