ஹெலிகாப்டர் விபத்து: ஆய்வுக்கு அனுப்பப்பட்ட கைபேசி

ஹெலிகாப்டர் விபத்து: ஆய்வுக்கு அனுப்பப்பட்ட கைபேசி

1 mins read
6816639d-3dd5-47da-a5ea-7ff971826a8a
-

நீல­கிரி: விபத்­துக்­குள்­ளான ராணுவ ஹெலி­காப்­ட­ரின் கடைசி நொடி­களை படம்­பி­டித்­த­வ­ரி­டம் விசா­ரணை நடத்­தப்­பட்ட நிலை­யில், அவர் பயன்­ப­டுத்­திய கைபேசி தட­ய­வி­யல் பரி­சோ­த­னைக்கு அனுப்­பப்­பட்­டுள்­ள­தாக ஹிந்­துஸ்­தான் டைம்ஸ் ஊட­கச் செய்தி தெரி­விக்­கிறது.

காட்­டேரி வனப்­ப­கு­தி­யில்­தான் ராணுவ ஹெலி­காப்­டர் விபத்­துக்­குள்­ளா­னது. இதில் முப்­ப­டை­க­ளின் தள­பதி உட்­பட 13 பேர் பலியாகி­னர். விபத்து நிகழ்ந்­த­போது திரு­மண புகைப்­ப­டக்­கா­ர­ரான ஜோ என்­ப­வர் அங்­கு­தான் இருந்­துள்­ளார். மேலும், ஹெலி­காப்­டர் கீழே விழும் காட்சியை அவர் தமது கைபேசியில் படம்­பி­டித்­துள்­ளார்.

அவர் எடுத்த காணொளி சமூக வலைத்­த­ளங்­களில் பர­வ­லா­கப் பகி­ரப்­பட்­டது. இதை­ய­டுத்து காவல்­து­றை­யி­னர் அவ­ரி­டம் விசாரணை நடத்தி உள்­ள­னர்.

தமது குடும்­பத்­தா­ரு­ட­னும் நண்­பர்­க­ளு­ட­னும் காட்­டேரி பகுதிக்குச் சுற்­றுலா சென்­ற­தா­க­வும் ஆர்வ மிகு­தி­யால் ஹெலி­காப்­டரை படம்­பி­டித்­த­தா­க­வும் ஜோ கூறி­யுள்­ளார்.

எனி­னும் தடை செய்­யப்­பட்ட வனப்­ப­கு­திக்­குள் சென்­றது ஏன் என்று காவ­வல்­து­றை­யி­னர் அவரி­டம் விசா­ரித்து வரு­கின்­ற­னர். அது வன விலங்­கு­கள் அதி­கம் நட­மாடும் பகுதி என்­றும் கூறப்­படு­கிறது.

இதற்­கி­டையே இந்த விபத்­தில் உயிர் பிழைத்த ஒரே நப­ரான கேப்­டன் வருண் சிங்­குக்கு பெங்­க­ளூ­ரில் உள்ள ராணுவ மருத்­து­வ­ம­னை­யில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்­கப்­பட்டு வரு­கிறது. அவ­ரது நிலை கவ­லைக்­கி­ட­மாக உள்­ள­தாக ஊட­கத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.