நிதி அல்ல, நீதிதான் வேண்டும்: நாகாலாந்து மக்கள் திட்டவட்டம்

2 mins read
4da4a85c-6c22-4b27-a1ab-b0db1d4a3869
-

புது­டெல்லி: நாகா­லாந்­தில் பாது­காப்­புப் படை­யி­ன­ரால் தவ­று­த­லாக சுட்­டுக்­கொல்­லப்­பட்ட 14 பேரின் குடும்­பத்­தா­ரும் தங்­க­ளுக்கு நிதியுதவி தேவை இல்லை என்­றும் நீதி­தான் வேண்­டும் என்­றும் வலி­யு­றுத்தி உள்­ள­னர்.

தவறு செய்த ராணு­வத்­தி­னர் மீது நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்டும் என்­றும் அது­வரை இழப்பீடு எதை­யும் ஏற்­கப் போவ­தில்லை என்­றும் அவர்­கள் திட்­ட­வட்­ட­மா­கத் தெரி­வித்­துள்­ள­னர்.

நாகா­லாந்­தின் மோன் மாவட்டத்­தில் தீவி­ர­வாத அமைப்­பைச் சேர்ந்த சிலரை தேடும் பணி­யில் ராணு­வம் ஈடு­பட்­டுள்­ளது. இந்­நி­லை­யில் சில தினங்­க­ளுக்கு முன்­னர் சுரங்கத் தொழி­லா­ளர்­க­ளு­டன் சென்று கொண்­டி­ருந்த வாக­னத்­தைக் கண்ட ராணு­வத்­தி­னர், அது தீவி­ர­வா­தி­க­ளின் வாக­னம் எனக் கருதி துப்­பாக்­கிச்­சூடு நடத்­தி­ய­தில் ஆறு அப்­பா­வி­கள் உயி­ரி­ழந்­தனா்.

இது­கு­றித்து தக­வல் அறிந்த அப்­ப­குதி மக்­கள் கடும் ஆவே­ச­மடைந்­த­னர். அவர்­கள் மொத்­த­மாக திரண்டு வந்து ராணு­வத்­தி­னரை தாக்க முற்­பட்­ட­னர்.

இதை­ய­டுத்து ராணு­வத்­தி­னர் மீண்­டும் துப்­பாக்­கிச்­சூடு நடத்த, பொது­மக்­களில் மேலும் ஏழு பேர் பலி­யா­கி­னர்.

அதன் பிறகு நிகழ்ந்த மற்­றொரு வன்­மு­றைச் சம்­ப­வத்­தில் மேலும் ஒரு­வர் உயி­ரி­ழந்தாா்.

இதை­ய­டுத்து பலி­யா­ன­வர்­களின் குடும்­பத்­தா­ருக்கு இழப்­பீடு வழங்க மத்­திய, மாநில அரசு­கள் முன்­வந்­துள்­ளன. ஆனால் பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் அதை ஏற்க மறுத்துள்­ள­னர்.

14 பேர் உயி­ரி­ழக்­கக் கார­ண­மான ராணுவ வீரர்­கள் மீது சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்­டும் என்று நாகா­லாந்­தைச் சேர்ந்த பல்­வேறு அமைப்­பு­கள் வலி­யு­றுத்தி உள்­ளன.

மேலும், நாட்­டின் கிழக்­குப் பகுதி­களில் நிறுத்­தப்­பட்­டுள்ள ஆயு­தப்­படைக்கு சிறப்பு அதி­கா­ரம் வழங்­கும் சட்­டத்தை திரும்­பப் பெற வேண்­டும் என்­றும் பல்­வேறு தரப்­பினரும் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்­துள்­ள­னர்.