ஓமிக்ரான்: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 38ஆக உயர்வு

ஓமிக்ரான்: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 38ஆக உயர்வு

1 mins read
a8f280a6-6745-4b5f-94d0-5da1838d0371
-

புது­டெல்லி: ஓமிக்­ரான் தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் எண்­ணிக்கை 38ஆக கூடி­யுள்­ளது என மத்­திய சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

நேற்று முன்­தி­னம் நாக்­பூ­ரில் 40 வயது ஆட­வ­ருக்கு ஓமிக்­ரான் பாதிப்பு உறுதி செய்­யப்­பட்ட நிலை­யில், கேர­ளா­வி­லும் ஒரு தொற்­றுச் சம்­ப­வம் பதி­வா­னது.

லண்டனில் இருந்து எர்­ணா­கு­ளம் வந்த பயணி ஒரு­வ­ருக்கு ஓமிக்­ரான் பாதிப்பு இருப்­பது கண்­ட­றி­யப்­பட்­டதை அடுத்து அவர் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளார்.

அவ­ரு­டன் விமா­னத்­தில் வந்த 149 பேருக்­கும் கொரோனா பரி­சோ­தனை நடத்­தப்­படும் என அதி­கா­ரி­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

நேற்று மாலை நில­வ­ரப்­படி, இந்­தி­யா­வில் அதி­க­பட்­ச­மாக மகா­ராஷ்­டி­ரா­வில் 18 பேரும் ராஜஸ்­தா­னில் ஒன்­பது பேரும் ஓமிக்­ரான் தொற்­றால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

டெல்­லி­யில் இரு­வர், குஜ­ராத், கர்­நா­ட­கா­வில் தலா மூவர், ஆந்திரா, கேரளா, சண்­டி­­க­ரில் தலா ஒரு­வருக்கு ஓமிக்­ரான் பாதிப்பு உள்ளது.

இதற்கிடையே, இந்தியாவில் நேற்று முன்தினம் புதிதாக 7,350 பேருக்கு கிருமி தொற்றியுள்ளது. தொடர்ந்து மூன்றாவது நாளாக அன்றாட பாதிப்பு குறைந்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 91,456 ஆக குறைந்துள்ளது.