மருந்துகள் அனுப்பிய இந்தியாவுக்கு தலிபான் பாராட்டு

புது­டெல்லி: ஆப்­கா­னிஸ்­தா­னில் உள்ள சிறார்­க­ளுக்கு மருந்­து­களை அனுப்­பும் இந்­தி­யா­வின் முயற்­சிக்கு அங்­குள்ள தலிபான் நிர்­வா­கம் பாராட்டு தெரி­வித்­துள்­ளது.

இந்­தி­யா­வில் இருந்து மருந்­துக் கரு­வி­களும் கொண்டு வரப்­பட்டு, ஆப்­கா­னிஸ்­தா­னில் உள்ள மருத்­துவ­ம­னை­களில் பயன்­ப­டுத்­தப்­படும் என தலிபான் செய்­தித்­தொ­டர்­பாளர் அஹ்­மத்­துல்­லாஹ் வாசிஹ் கூறியுள்­ளார்.

கடந்த வெள்­ளிக்­கி­ழமை காபூல் நக­ரில் இருந்து புதுடெல்லி வந்தடைந்த விமா­னத்­தில் ஆப்கானில் இருந்து 104 சீக்­கி­யர்­களும் இந்­துக்­களும் அழைத்து வரப்­பட்­ட­னர். அந்த விமா­னம் காபூலுக்கு திரும்­பி­ய­போது, 1.6 டன் உயிர்­காக்­கும் மருந்­து­கள் அனுப்பி வைக்­கப்­பட்­டன.

இந்­தியா அனுப்பி வைத்­துள்ள இம்­ம­ருந்­து­கள் காபூ­லில் உள்ள உலக சுகா­தார அமைப்­பின் பிரதி­நி­தி­க­ளி­டம் ஒப்­ப­டைக்­கப்­படும் என்­றும் அதை­ய­டுத்து, அங்­குள்ள இந்­திரா காந்தி குழந்­தை­கள் மருத்து­வ­ம­னை­யில் பயன்­ப­டுத்­தப்­படும் என்­றும் இந்­திய வெளி­யு­றவு அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

ஆப்­கா­னிஸ்­தான், தலிபான் கட்­டுப்­பாட்­டுக்­குள் வந்தபிறகு இந்­தியா மனி­த­நேய அடிப்­ப­டை­யில் மேற்­கொண்ட முதல் முயற்­சி­யாக இது அமைந்­துள்­ளது.

இந்­நி­லை­யில், இந்­தி­யா­வுக்­கும் ஆப்­கா­னிஸ்­தா­னுக்­கும் இடை­யே­யான உறவு மிக முக்­கி­ய­மா­னது என தலிபான் வெளி­யு­றவு அமைச்சின் செய்­தித் தொடர்­பா­ளர் அப்­துல் பால்கி தெரி­வித்­துள்­ளார்.

கடந்த வெள்­ளிக்­கி­ழமை அன்று இந்­தி­யா­வில் இருந்து 85 ஆப்­கன் குடி­மக்­கள் அழைத்து வரப்­பட்­ட­தா­க­வும் இந்த பயண நடை­முறை நீடிக்­கும் என்­றும் அவர் டுவிட்­டர் பதிவு ஒன்­றில் குறிப்­பிட்­டுள்­ளார்.

தலிபான் நிர்­வா­கத்தை இந்­தியா இன்­னும் அங்­கீ­க­ரிக்­க­வில்லை என்றாலும், ஆப்­கான் மக்­க­ளுக்கு மனி­த­நேய அடிப்­ப­டை­யில் உதவப்­போ­வ­தாக தெரி­வித்­தி­ருந்­தது.

முன்னதாக, பாகிஸ்தான் வழியாக ஆப்கானிஸ்தானுக்கு ஐம்பதாயிரம் டன் கோதுமையை இந்தியா அனுப்பி உள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!