பிரபஞ்ச அழகியாக மகுடம் சூடிய இந்தியாவின் ஹர்னாஸ் சந்துவைப் பற்றி தெரிந்துகொள்ள இணையவாசிகள் பேரார்வத்துடன் இருக்கின்றனர்.
இதற்கு முன்னதாக 2000ஆம் ஆண்டில் லாரா தத்தா, பிரபஞ்ச அழகியாகத் தேர்வாகி இந்தியாவுக்குப் பெருமை சேர்த்திருந்தார். 21 ஆண்டுகள் கழித்து, மீண்டும் இந்தியாவுக்குப் பெருமையைத் தேடித் தந்துள்ளார் ஹர்னாஸ், 21.
இந்நிலையில், ஹர்னாசின் பின்னணி, அவருடைய வயது, உயரம், இன்ஸ்டகிராம் பக்கம் உள்ளிட்ட விவரங்களைப் பற்றி தெரிந்துகொள்ள இணையத்தில் அவை தொடர்பாக மக்கள் தேடி வருகின்றனர்.
பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்ற பிறகு டெல்லி டைம்ஸ் ஊடகத்திடம் பேசிய ஹர்னாஸ் சந்து, "பட்டம் வென்றிருப்பது பற்றி என்னால் நம்பமுடியவில்லை. இந்தியாவின் பெயரைக் கேட்டவுடனேயே என்னால் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
நானும் அழுதேன், என்னைச் சுற்றி இருந்தவர்களும் அழுதனர். இந்த நாளுக்காக நாங்கள் 21 ஆண்டுகளாகக் காத்திருந்தோம். நடப்பவற்றையெல்லாம் என்னால் நம்பவே முடியவில்லை," என்று கூறினார்.


