வழக்கமான விமானச் சேவை எப்போது? இந்திய அமைச்சர் விளக்கம்

வழக்கமான விமானச் சேவை எப்போது? இந்திய அமைச்சர் விளக்கம்

1 mins read
ecb628ee-bd17-49d0-9e5b-340662b2e9cd
-
Google News Preferred Icon

ஓமிக்ரான் கிருமி எந்தளவில் பரவுகிறது என்பதைப் பொறுத்தே வழக்கமான அனைத்துலக விமானச் சேவையை மீண்டும் தொடங்க இயலும் என இந்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பல்வேறு அம்சங்களைக் கவனத்தில்கொள்ள வேண்டியுள்ளது என்றும் விமானப் போக்குவரத்து எப்போது தொடங்கும் என இப்போதே குறிப்பிட்டுச் சொல்ல இயலாது என்றும் அவர் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 14) கூறினார்.

அடுத்த இரு வாரங்களில் நிலவும் சூழ்நிலையைப் பொறுத்தே முடிவெடுக்க இயலும் என்று குறிப்பிட்ட அவர், இது தொடர்பாக சுகாதார அமைச்சுடன் இணைந்து பணியாற்றி வருவதாகத் தெரிவித்தார்.

இந்தியாவில் வழக்கமான அனைத்துலக விமானச் சேவை டிசம்பர் 15ஆம் தேதி தொடங்கப்படவிருந்தது.

எனினும், ஓமிக்ரான் திரிபு தலைதூக்கிய நிலையில், ஜனவரி 31ஆம் தேதிவரை விமானச் சேவைகளை நிறுத்திவைக்க முடிவு செய்யப்பட்டது.