பாலியல் தொழிலாளர்களுக்கு ஆதார், குடும்ப அட்டைகள்

பாலியல் தொழிலாளர்களுக்கு ஆதார், குடும்ப அட்டைகள்

1 mins read
44fd8f2f-bc9a-4b88-8d31-a49944d93e34
-

புது­டெல்லி: நாட்­டின் அனைத்து குடி­மக்­க­ளுக்­கும் அடிப்­படை உரிமை­க­ளுக்­கான உத்­த­ர­வா­தம் அளிக்­கப்­பட வேண்­டும் என உச்ச நீதி­மன்­றம் தெரி­வித்­துள்­ளது.

இதற்­காக குடி­மக்­கள் செய்­யும் தொழிலைக் கருத்­தில் கொள்­ளக்­கூ­டாது என்­றும் பாலி­யல் தொழி­லா­ளர்­க­ளுக்கு வாக்­கா­ளர் அடை­யாள அட்டை, குடும்ப, ஆதார் அட்­டை­களை வழங்க வேண்­டும் என்­றும் வழக்கு ஒன்­றின் விசா­ர­ணை­யின்­போது அந்­நீ­தி­மன்­றம் குறிப்­பிட்­டுள்­ளது.

கொரோனா ஊர­டங்கு வேளை­யில் மற்ற பிரி­வி­ன­ரைப் போல் பாலி­யல் தொழி­லா­ளர்­களும் கடுமை­யாகப் பாதிக்­கப்­பட்­ட­னர். இது தொடர்­பாக ஊட­கங்­களில் அவ்­வப்­போது செய்­தி­கள் வெளி­யா­கின.

இந்­நி­லை­யில், இந்த விவ­ரங்­க­ளைக் குறிப்­பிட்டு தன்­னார்­வத் தொண்டு நிறு­வ­னம் ஒன்று உச்ச நீதி­மன்­றத்­தில் பொது­நல வழக்கு ஒன்றைத் தாக்­கல் செய்­தது.

இந்த மனுவை விசா­ரித்த நீதி­மன்­றம், பாலி­யல் தொழி­லா­ளர்­க­ளுக்கு குடும்ப அட்­டை­கள் மூலம் உண­வுப் பொருள்­களை வழங்க வேண்­டும் என கடந்த ஆண்டு உத்­த­ரவு பிறப்­பித்­தது. நேற்று முன்­தி­னம் இந்த வழக்கு மீண்­டும் விசா­ர­ணைக்கு வந்­த­போது, மேற்­கு­றிப்­பிட்ட உத்­த­ரவு கடந்த 2011ஆம் ஆண்­டி­லேயே பிறப்­பிக்­கப்­பட்­டதை நீதி­ப­தி­கள் சுட்டிக்­காட்­டி­னர்.