லக்கிம்பூர் விவசாயிகளைக் கொல்ல திட்டமிட்ட சதி: விசாரணைக்குழு தகவல்

லக்கிம்பூர் விவசாயிகளைக் கொல்ல திட்டமிட்ட சதி: விசாரணைக்குழு தகவல்

2 mins read
925e079b-4ec7-4bb0-87bb-85fcaacb6b6c
-

லக்னோ: லக்­கிம்­பூர் கேரி­யில் விவ­சா­யி­களைக் கொல்ல சதித்­திட்­டம் தீட்­டப்­பட்­ட­தாக சிறப்பு விசா­ர­ணைக் குழு தெரி­வித்­துள்­ளது. இது தொடர்­பாக அக்­குழு நீதி­மன்­றத்­தில் தாக்­கல் செய்த அறிக்­கை­யில், மேலும் பல திடுக்­கி­டும் தக­வல்­கள் இடம்­பெற்­றுள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

கடந்த அக்­டோ­பர் மூன்­றாம் தேதி­யன்று உத்­த­ரப் பிர­தேச மாநிலம், லக்­கிம்­பூர் கேரியில் நடை­பெற்ற நிகழ்ச்­சி­யில் பங்கேற்­கச் சென்­றி­ருந்­தார் மத்­திய உள்­துறை இணை­ய­மைச்­சர் அஜய் மிஸ்ரா. அப்­போது அவரை எதிர்த்து விவ­சா­யி­கள் போராட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர்.

இந்­நி­லை­யில் அவ்­வ­ழியே வந்த அமைச்­ச­ரின் மகன் ஆஷிஷ் மிஸ்­‌ரா­வின் கார் திடீரென அதிவேகத்தில், அங்கு திரண்­டி­ருந்த விவ­சா­யி­கள் கூட்­டத்­துக்­குள் புகுந்­தது. கார் மோதி­ய­தில் நான்கு விவ­சா­யி­கள் படு­கா­ய­ம­டைந்து உயி­ரி­ழந்­த­னர். இதை­ய­டுத்து இரு தரப்­பி­ன­ருக்­கும் இடையே மோதல் வெடித்து வன்­மு­றை­யில் முடிந்­தது. வன்­மு­றைச் சம்­ப­வங்­களில் மேலும் நான்கு பேர் பலி­யா­கி­னர்.

இது தொடர்­பான விசா­ர­ணையை மாநில காவல்­துறை சரி­யாக நடத்­த­வில்லை என உச்ச நீதி­மன்­றம் தெரி­வித்­ததை அடுத்து, சிறப்பு விசா­ர­ணைக் குழு அமைக்­கப்­பட்டு, அதில் மூன்று ஐபி­எஸ் அதி­கா­ரி­களும் இடம்­பெற்­ற­னர்.

வன்­மு­றைச் சம்­ப­வத்­துக்கு மத்­திய அமைச்­சர் அஜய் மிஸ்­ரா­வின் மகன் ஆஷிஷ் மிஸ்­ரா­தான் கார­ணம் என விவ­சா­யி­கள் தரப்­பில் குற்­றம்­சாட்­டப்­பட்­டது. இதை­ய­டுத்து ஆஷிஷ் கைதா­னார். மேலும் 12 பேர் மீது வழக்­குப்­ப­தி­வா­னது.

அனை­வ­ரும் சிறை­யில் அடைக்­கப்­பட்ட நிலை­யில், சிறப்பு விசா­ர­ணைக் குழு­வி­னர் மேற்­கொண்ட தீவிர விசா­ர­ணை­யின்­போது பல்­வேறு உண்­மை­கள் வெளிப்­பட்­டன.

விவ­சா­யி­கள் மீதான தாக்­கு­தல் திட்­ட­மிட்டு நடத்­தப்­பட்­ட­தா­க­வும் கைதா­ன­வர்­கள் மீது கொலை முயற்சி, பயங்­கர ஆயு­தங்­கள் போன்­ற­வற்­றால் கொடூர காயங்­களை ஏற்­ப­டுத்­து­தல் உள்­ளிட்ட பிரி­வு­க­ளின் கீழ் வழக்­குப் பதிவு செய்ய அனு­ம­திக்க வேண்­டும் என்­றும் கோரி சிறப்பு விசா­ர­ணைக் குழு­வின் தலை­வர் வித்­யா­ராம் திவா­கர் நீதி­மன்­றத்­தில் மனுத்­தாக்­கல் செய்­துள்­ளார்.

முன்­ன­தாக குற்­றம்­சாட்­டப்­பட்­ட­வர்­கள் மீது சாதா­ரண பிரி­வு­க­ளின் கீழ் வழக்­குப்­ப­திவு செய்­யப்­பட்­டி­ருந்­தது. இந்­நி­லை­யில், அந்­தப் பிரி­வு­கள் மாற்­றப்­பட்­டி­ருப்­ப­தற்கு, அடுத்த ஆண்டு உத்­த­ரப் பிர­தே­சத்­தில் சட்­ட­மன்­றத் தேர்­தல் நடப்­பதே கார­ணம் என காங்­கி­ரஸ் உள்­ளிட்ட எதிர்க்­கட்­சி­கள் சாடி உள்­ளன.

விவ­சா­யி­க­ளின் ஆத­ர­வைப் பெறும் நோக்­கத்­து­டன் காவல்­துறையை ஆளும்­த­ரப்பு பயன்­படுத்­திக்கொள்­வ­தாக அவை விமர்­சித்­துள்­ளன.