மகாராஷ்டிரா மேலவைத் தேர்தல்: பாஜகவுக்கு திடீர் வெற்றி

மும்பை: சட்­ட­மே­ல­வைத் தேர்­த­லில் பாஜக பெற்­றுள்ள வெற்றி அம்­மாநில அர­சி­யல் களத்­தில் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்தி உள்­ளது. மொத்­தம் ஆறு இடங்­க­ளுக்கு நடை­பெற்ற தேர்­த­லில் பாஜக நான்கு இடங்­க­ளைக் கைப்­பற்­றி­யது.

மகா­ராஷ்­டி­ரா­வில் கூட்­டணி ஆட்சி நடை­பெற்று வரு­கிறது. சிவ­சேனா தலை­மை­யி­லான கூட்­ட­ணி­யில் காங்­கி­ரஸ், தேசி­ய­வாத காங்­கி­ரஸ் ஆகிய கட்­சி­கள் இடம்­பெற்­றுள்­ளன.

இந்­நி­லை­யில், அம்­மா­நில சட்­ட­மே­ல­வை­யில் ஆறு இடங்­கள் காலி­யா­கின. ஆறு மேலவை உறுப்­பி­னர்­க­ளின் (எம்­எல்சி) பத­விக்­கா­லம் முடி­வுக்கு வந்­ததை அடுத்து, அந்த இடங்­க­ளுக்கு கடந்த 10ஆம் தேதி தேர்­தல் நடை­பெற்­றது. அதன் முடி­வு­கள் தற்­போது வெளி­யாகி உள்­ளன.

இரண்டு தொகு­தி­களில் எந்­த­விதப் போட்­டி­யும் இன்றி சிவ­சே­னா­வும் பாஜ­க­வும் தலா ஒரு இடத்­தைக் கைப்­பற்றி உள்­ளன. இதே­போல் காங்­கி­ர­சும் ஒரு தொகு­தி­யைப் போட்­டி­யின்­றிக் கைப்­பற்­றி­யது.

மீத­முள்ள மூன்று இடங்­களில் பாஜக வேட்­பா­ளர்­கள் வெற்றி பெற்­றுள்­ள­னர். இதன் மூலம் தேர்­தல் நடை­பெற்ற ஆறு இடங்­களில் நான்கு பாஜக வசம் சென்­றுள்­ளன.

இது குறித்து கருத்து தெரிவித்த எதிர்க்­கட்­சித் தலை­வர் தேவேந்­திர பட்­னா­யிஸ், இந்த வெற்­றி­யா­னது எதிர்­கால வெற்­றி­க­ளுக்கு அடித்­த­ள­மாக இருக்­கும் என்­றார். சிவ­சேனா கூட்­ட­ணி­தான் மகா­ராஷ்­டி­ரா­வில் இனி நடை­பெ­றும் அனைத்து தேர்­தல்­க­ளி­லும் வெற்­றி­பெ­றும் என்று அக்­கட்­சி­கள் தெரி­வித்து வந்­தது நிறை­வே­றாது என பாஜக நிரூ­பித்­துள்­ளது என்­றும் தேவேந்­திர பட்­னா­யிஸ் கூறி­யுள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!