புதுடெல்லி: கொரோனா காலக்கட்டத்தில் நாடு முழுவதும் குடும்ப வன்முறை தொடர்பான வழக்குகள் குறைந்துள்ளன.
கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை 3,748 குடும்ப வன்முறை வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாகவும் நடப்பாண்டில் கொரோனா இரண்டாவது அலையின்போது, ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை 3,582 குடும்ப வன்முறை வழக்குகள்தான் பதிவாகின என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
எனினும் பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 370,000 வழக்குகள் பதிவாகி உள்ளன.
இது தொடர்பாக 398,620 பேர் கைதாகி உள்ளனர். 488,143 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், 31,402 பேருக்கு தண்டனை கிடைத்துள்ளது.
நகர்ப்புறங்களில் பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்களின் எண்ணிக்கை கடந்த 2020ல், முந்தைய ஆண்டைவிட 8.3 விழுக்காடு குறைந்துள்ளது.

