மாட்டு வண்டி போட்டிக்கு நீதிமன்றம் அனுமதி

மாட்டு வண்டி போட்டிக்கு நீதிமன்றம் அனுமதி

1 mins read
c4c7f068-69a8-493e-b2e9-fe7f023a75fe
-

புது­டெல்லி: ஜல்­லிக்­கட்டு, காளை விரட்டு, ரேக்ளா பந்­த­யம் (மாட்டு வண்டி) உள்­ளிட்­ட­வைக்கு கடந்த 2014ஆம் ஆண்டு தடை விதித்து உச்ச நீதி­மன்­றம் உத்­த­ர­விட்­டது. ஆனால் தமி­ழக மற்­றும் கர்­நா­டக அர­சு­கள் சட்ட திருத்­தங்­களை கொண்டு வந்து ஜல்­லிக்­கட்டு மற்­றும் காளை விரட்டு விளை­யாட்­டு­களை நடத்தி வரு­கிறது.

இந்­தச் சட்­டங்­க­ளுக்கு எதி­ராக தொட­ரப்­பட்ட மனுக்­கள் உச்ச நீதி­மன்ற அர­சி­யல் சாசன அமர்வு முன் நிலு­வை­யில் இருந்து வரு­கிறது.

இந்த நிலை­யில் மராட்­டி­யத்­தில் 'ரேக்ளா' பந்­த­யம் நடத்த அனு­மதி கேட்டு அம்­மா­நில அரசு தாக்­கல் செய்த மனுக்­களை நீதி­பதி ஏ.எம்.கான்­வில்­கர் தலை­மை­யி­லான அமர்வு விசா­ரித்­தது.

மராட்­டிய அரசு சார்­பில் மூத்த வழக்­க­றி­ஞர் முகுல் ரோத்­தகி முன்­னி­லை­யாகி வாதங்­களை முன்­வைத்­தார். இதை­ய­டுத்து நீதி­ப­தி­கள், ரேக்ளா பந்­த­யத்­திற்கு உரிய விதி­களை பின்­பற்றி நடத்த அனு­மதி வழங்­கி­னர்.