யாழ்ப்பாணத்தில் சட்டையில்லாமல் வழிபட்ட சீன தூதர்

யாழ்ப்பாணத்தில் சட்டையில்லாமல் வழிபட்ட சீன தூதர்

1 mins read
b4889329-84d3-420b-b9ec-796eed674c88
-

யாழ்ப்பாணத்துக்கு வருகையளித்த இலங்கைக்கான சீனத் தூதர்

கீ ெஸன்ஹோங் மற்றும் தூதரக அதி காரிகள் வியாழன் காலை வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்குச் சென்று வழிபட்டனர். இந்தக் கோயிலுக்கு வரும் ஆண் பக்தர்கள் மேல்சட்டை அணியக் கூடாது. அதன்படி சீனத் தூதர் கீ ெஸன்ஹோங் (இடமிருந்து 3வது) மேல் சட்டையைக் கழற்றி வேட்டியணிந்து பூ, பழங்களுடன் வந்து வழிபட்டார். அண்மையில் இங்குள்ள தமிழர்கள், வழிகாட்டும் பலகைகளில் தமிழில் இல்லாமல் மாண்டரின் மொழியில் எழுதப்பட்டு இருந்ததை குறை கூறி இருந்தனர். இலங்கையில் தமிழ் அதிகார பூர்வ மொழியாக உள்ளது. இந்நிலையில் பலகைகளைத் திருத்த சீனர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். அதே வேளையில் சீனாவை தமிழர்கள் தங்களுடைய நட்பு நாடாகக் கருத வேண்டும் என்பதற்காக சீனர்கள் கோயிலில் சென்று வழிபட்டு உள்ளனர். படம்: இந்தியன் எக்ஸ்பிரஸ் (ஈழநாடு).