101 பேருக்கு 'ஓமிக்ரான்'

101 பேருக்கு 'ஓமிக்ரான்'

2 mins read
a17c3994-d640-400a-898e-b5c89c8f612c
-

சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளின் பயணிகள் சோதனைக்கு முன்பதிவு ெசய்ய வேண்டும்

புது­டெல்லி: இந்­தி­யா­வில் 101 பேருக்கு ஓமிக்­ரான் தொற்று உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது.

கொவிட்-19 கிரு­மி­யி­லி­ருந்து உரு­மா­றிய ஓமிக்­ரான், 90க்கும் மேற்­பட்ட நாடு­களில் பர­வி­யி­ருப்­ப­தாக உலக சுகா­தார அமைப்பு தெரி­வித்­தது.

இந்த நிலை­யில் இந்­தி­யா­வில் இது­வரை 11 மாநி­லங்­களில் ஓமிக்­ரான் தொற்று கண்­ட­றி­யப்­பட்­டு உள்­ளது.

இந்­தி­யா­வில் மொத்­தம் 101 பேருக்கு ஓமி­ரான் தொற்று உறு­தி­ யா­கி­யுள்­ளது என்று மத்­திய சுகா­தா­ரத்­துறை தெரி­வித்தது.

அதி­க­பட்­ச­மாக மகா­ராஷ்­டி­ரா­வில் 32, டெல்­லி­யில் 22, ராஜஸ்­தா­னில் 17, கர்­நா­ட­கா­வில் 8, தெலுங்­கா­னா­வில் 8, குஜ­ராத்­தில் 5, கேர­ளா­வில் 5 பேருக்கு ஓமிக்­ரான் தொற்று உறு­தி­யா­கி­யுள்­ளது. மேலும், தமி­ழ­கம், ஆந்­திரா, மேற்கு­ வங்­கம், சண்­டி­கர் ஆகிய மாநி­லங்­களில் தலா ஒன்று அல்­லது அதற்கு மேற்­பட்ட ஓமிக்­ரான் தொற்றுச் சம்­ப­வங்­கள் பதி­வா­கி­யுள்­ளன.

இதற்கிடையே தொற்று ஆபத்து அதி­க­முள்ள நாடு­க­ளி­லி­ருந்து வரும் பய­ணி­கள் 'ஆர்­டி­பி­சி­ஆர்' பரி­சோ­த­னைக்கு முன்­ப­திவு செய்­வது கட்­டா­யம் என தெரி­விக்­கப்­ப­பட்­டுள்­ளது.

சிங்­கப்­பூர், ஐரோப்­பிய நாடு­கள், தென்­னாப்­பி­ரிக்கா, பிரே­சில், ஹாங்­காங் உட்­பட அதிக பாதிப்­புள்ள 12 நாடு­க­ளி­லி­ருந்து வரும் பய­ணி­கள் கட்­டா­யம் 'ஆர்­டி­பி­சி­ஆர்' பரி­சோ­த­னைக்கு முன்­ப­திவு செய்ய வேண்­டும் என்று மத்­திய விமானப் போக்­கு­வ­ரத்­துத் துறை அமைச்சு அறிக்கை வெளி­யிட்­டுள்­ள­தாக புதிய தலை­முறை கூறியது.

ஓமிக்­ரான் வகை கிரு­மிப் பர­வ­லைக் கருத்­தில் கொண்டு முதல் கட்­ட­மாக டெல்லி, மும்பை கொல்­கத்தா, சென்னை, பெங்­க­ளூரு மற்­றும் ஹைத­ரா­பாத் ஆகிய ஆறு மெட்ரோ நக­ரங்­களில் இதனை செயல்­ப­டுத்த மத்­திய விமானப் போக்கு­வ­ரத்துத் துறை திட்­ட­மிட்டு­உள்­ளது.

அனைத்து விமான நிறு­வ­னங்­க­ளுக்­கும் தங்­கள் பய­ணி­களை விமா­னத்­தில் ஏற்­று­வ­தற்கு முன்பு கட்­டா­ய­மாக முன்­ப­திவு செய்ய வேண்­டும் என்று ஆலோ­சனை வழங்கப் பட்டுள்ளளது.

முன்­ப­திவு செய்­வ­தில் பய­ணி­ க­ளுக்கு ஏதே­னும் சிர­மம் இருந்தால் அவர்­கள் ஏறு­வ­தற்கு மறுக்­கப்­பட மாட்­டார்­கள். அத்­த­கைய பய­ணி ­க­ளைக் கண்­ட­றிந்து, பரி­சோ­த­னைக்­காக விமான நிலை­யத்­தில் உள்ள பதிவு முகப்­பு­க­ளுக்கு அழைத்­துச் செல்­வது விமான நிறு­வ­னங்­க­ளின் பொறுப்பு என்று அமைச்சு கூறியுள்ளது.