புதுடெல்லி: கடந்த ஏழு ஆண்டுகளில் ஒரு இடத்தில் கூட ஊழல் என்பதை மக்கள் கண்டிருக்க முடியாது. நாங்கள் ஓரிரு தவறான முடிவுகளை எடுத்திருக்கலாம். அந்த முடிவுகள் தவறானதாக இருந்தாலும் எங்கள் நோக்கம் தவறு என விமர்சகர்கள்கூட விமர்சித்தது இல்லை என்று இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் ஆண்டு பொதுக்கூட்டத்தில் ேபசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரி வித்தார்.
"எங்கள் அரசு பொருளாதாரத்தில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. நம் நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து வளர்ச்சி திட்டங்கள் எதுவும் சென்றடையாத 60 கோடி மக்களுக்கு நாங்கள் வளர்ச்சியை கொண்டு சென்றுள்ளோம். அந்த 60 கோடி மக்களும் இதுவரை வங்கிக் கணக்கு, மின்சார இணைப்பு, அடிப்படை மருத்துவ வசதி எதுவும் கிடைக்கப்பெறாதவர்கள்.
"மோடி அரசாங்கம் அவர் களுக்கு அனைத்தையும் தந்து ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையை கொண்டு வந்துள்ளது. பிரதமர் மோடியின் ஆளுமையாலும் 130 கோடி மக்களின் பங்களிப்பாலும் கொரோனா பெருந்தொற்று கட்டுக்குள் வந்தது. பொருளாதாரம் அதிவேகமாக முன்னேறிக்கொண்டிருக்கிறது. உற்பத்தி மற்றும் ஏற்றுமதி ஆகியவை அதிகரித்துள்ளது," என்று அமித் ஷா ேமலும் தெரிவித்தார்.

