புதுெடல்லி: இந்தியாவில் 16 கோடி பேர் மது பழக்கத்திற்கு அடிமையாகியிருக்கிறார்கள். அவர்களில் 7.5 விழுக்காட்டினர் பெண்கள் எனத் தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் மதுபானங்கள் விற்பனை, எத்தனை பேர் மது அருந்துகிறார்கள் என்பது தொடர்பாக நாடு முழுவதும் யு.பி.எஸ் என்ற நிறுவனம் சமீபத்தில் ஆய்வு மேற்கொண்டது. அதன் ஆய்வில் 2020ம் ஆண்டில் மொத்த மதுபான அளவு 29% குறைந்துள்ளது தெரிய வந்துள்ளது.
பீர் 39.1 விழுக்காடு குறைந்துஉள்ளது. தனிநபர் சராசரி ஆல்கஹால் நுகர்வு என்பது ஆசிய அளவில் 6.4 லிட்டராகவும், உலக அளவில் 6.2 லிட்டராகவும் உள்ள நிலையில் இந்தியாவில் 5.5 லிட்டராக உள்ளது. இந்தியா முழுவதும் சுமார் 16 கோடி பேர் மது அருந்தும் பழக்கம் கொண்டவர்களாக உள்ளனர். இவர்களில் 7.5% பேர் பெண்கள். குறிப்பாக, கொரோனாவுக்கு பிந்தைய கால கட்டங் களில்தான் மது அருந்தும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
அதிகளவு மது குடிக்கும் பட்டியலில் தமிழகம் இல்லை. ஆனால் ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கர்நாடக, ஆகிய மாநிலங்கள் இடம்பெற்றுள்ளன.

