புதுடெல்லி: நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் நவம்பர் 29ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 23ஆம் தேதி வரை நடைபெற்று வருகிறது. ஆரம்பத்தில் இருந்தே இரு அவைகளிலும் 12 எம்.பி.க்கள் இடைநீக்கம் உள்ளிட்ட காரணங்களுக்காக எதிர்க்கட்சி யினர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், லக்கிம்பூர் விவசாயிகள் கொல்லப்பட்ட விவகாரத்தில் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்யக் கோரி அமளியில் ஈடுபட்டதால் நேற்று முன்தினம் முழு வதும் அவைகள் செயல்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது. தொடர்ந்து நேற்று காலை அவைகள் கூடியதிலிருந்து எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து மாநிலங்களவை திங்கள்கிழமை காலை வரை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
பிற்பகலிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொடர் அமளி தொடர்ந்ததால் மக்களவையும் திங்கள்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது.

