திருப்பதி வருமானம் ரூ.20 கோடி

1 mins read
04f89afe-5817-4287-84b8-6716125b7a24
-

திருப்பதி: திருப்பதிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 10 ஆம் தேதி 28,868 பேர் தரிசனம் செய்தனர். ரூ.2.43 கோடி உண்டியலில் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். கடந்த 14ஆம் தேதி அதிகபட்சமாக ரூ.4.17 கோடி உண்டியலில் காணிக்கையாக வசூலானது. கடந்த வாரத்தில் 20 லட்சத்து 30,332 பக்தர்கள் தரிசனம் செய்தனர். ரூ.20.02 கோடி உண்டியல் காணிக்கை வசூலாகியுள்ளது.