பயங்கரவாதம், எல்லை ஊடுருவல் குறித்து இந்தியா, பிரான்ஸ் முக்கியப் பேச்சு

பயங்கரவாதம், எல்லை ஊடுருவல் குறித்து இந்தியா, பிரான்ஸ் முக்கியப் பேச்சு

2 mins read
95967e3f-02f3-4dc7-b043-6b64b4ea92dd
புதுடெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் பார்லி, அமைச்சர் ராஜ்நாத் சிங் இடையே நேற்று முன்தினம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது அமைச்சர் பார்லியை வரவேற்றார் ராஜ்நாத் சிங். படம்: இபிஏ -

புது­டெல்லி: இந்­திய பாது­காப்பு அமைச்­சர் ராஜ்­நாத் சிங், பிரான்ஸ் வெளி­யு­றவு அமைச்­சர் ஃப்ளோரன்ஸ் பார்லி இடை­யே­யான பேச்­சு­வார்த்தை பல்­வேறு வகை­யி­லும் இந்­தி­யா­வுக்­குச் சாத­க­மாக அமைந்­த­தாக ஊட­கங்­கள் தெரி­விக்­கின்­றன.

இரண்டு நாள் பய­ண­மாக இந்­தியா வந்­துள்ள பார்லி, பிர­த­மர் மோடி, தேசிய பாது­காப்பு ஆலோ­ச­கர் அஜித் தோவல் ஆகி­யோ­ரைச் சந்­தித்­துப் பேசி­னார்.

இதை­ய­டுத்து, பாது­காப்பு அமைச்­சர் ராஜ்­நாத் சிங்­கு­ட­னும் அவர் முக்­கிய ஆலோ­சனை நடத்­தி­னார்.

அப்­போது, ஆப்­கா­னிஸ்­தா­னின் அண்­மைய நில­வ­ரம், பாகிஸ்­தா­னின் எல்லை கடந்த பயங்­க­ர­வா­தம், சீனா­வின் எல்லை ஊடு­ரு­வல்­கள் ஆகி­யவை இந்­தப் பேச்­சு­வார்த்­தை­யின் முக்­கிய அம்­சங்­க­ளாக இருந்­தன என்­றும் இரு­த­ரப்பு வியூக உற­வு­களை மேம்­ப­டுத்­து­வது குறித்­துப் பேசப்­பட்­ட­தா­க­வும் தெரி­கிறது.

இந்­தியா, பிரான்ஸ் இடை­யே­யான பாது­காப்­புத் துறை தொடர்­பான இந்த பேச்­சு­வார்த்­தை­யில் இந்­தி­யா­வில் உற்­பத்தி ('மேக் இன் இந்­தியா') செய்­வது குறித்து மிக ஆழ­மாக விவாதிக்கப்­பட்­டது.

என்­றும் இது தொடர்­பாக இந்­திய நிறு­வ­னங்­க­ளு­டன் பிரான்ஸ் முன்­னணி நிறு­வ­னங்­கள் எவ்­வாறு இணைந்து செயல்­ப­ட­லாம் அல்­லது தத்­தம் நாடு­களில் உற்­பத்தி அமைப்­பு­களை நிறு­வ­லாம் என்­பது குறித்­தும் பேசப்­பட்­ட­தா­கத் தெரி­கிறது.

பிரான்­சி­டம் இருந்து 59 ஆயி­ரம் கோடி ரூபாய் மதிப்­பில் 36 ரஃபேல் போர் விமா­னங்­களை வாங்­கு­கிறது இந்­தியா.

இந்­நி­லை­யில், இந்­தி­யா­வுக்கு மேலும் பல விமா­னங்­க­ளைத் தர பிரான்ஸ் தயா­ராக உள்­ளது என்று குறிப்­பிட்ட அமைச்­சர் பார்லி, 'மேக் இன் இந்­தியா' முன்­னெ­டுப்­புக்கு பிரான்ஸ் முழு ஆத­ரவு அளிக்­கும் என்­றார்.

இந்த இரு­த­ரப்பு பேச்­சு­வார்த்தை மிகச் சிறப்­பாக அமைந்­தது என்­றும் இரு நாடு­க­ளுக்கு இடை­யே­யான உற­வு­கள் முன்­னை­விட மிகப் பொருத்­த­மா­ன­தாக உள்­ள­தா­க­வும் அமைச்­சர் ராஜ்­நாத் சிங் தெரி­வித்தார்.