நிபுணர்: தினமும் 1.4 மில்லியன் பேர் பாதிக்கப்பட வாய்ப்பு

1 mins read
670da41b-4252-43dd-96a5-6b9db473392f
தென்னாப்பிரிக்கா வில் ஓமிக்ரான் தொற்றுப்பரவல் அதிகரித்துவிட்ட தாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், அம்மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக மும்பை யில் இளையர்கள் ஓவியங்கள் தீட்டினர். கோப்புப்படம்: ஊடகம் -

வி.கே.பால்: பிரிட்டனைப் போல் இந்தியாவில் ஓமிக்ரான் பரவாமல் தடுக்க வேண்டும்

புது­டெல்லி: ஓமிக்­ரான் பாதிப்பு பிரிட்­ட­னில் பர­வி­ய­து­போல் இந்­தி­யா­வில் பர­வும் பட்­சத்­தில், நாள்­தோ­றும் சுமார் 1.4 மில்­லி­யன் பேர் பாதிக்­கப்­ப­டு­வார்­கள் என கொரோனா பர­வல் தடுப்­புக் குழு­வின் உறுப்­பி­ன­ரான மருத்­து­வர் வி.கே.பால் கணித்­துள்­ளார்.

உலக நாடு­க­ளுக்­குப் புதிய அச்­சு­றுத்­த­லாக உரு­வெ­டுத்­துள்ள கொரோனா கிரு­மி­யின் உரு­மா­றிய வகை­களில் ஒன்­றான ஓமிக்­ரான் பிரிட்­ட­னில் வேக­மா­கப் பரவி வரு­கிறது. அங்கு சுமார் 94,000 பேருக்கு தொற்று ஏற்­பட்­டுள்­ளது.

இந்­தி­யா­வில் 11 மாநி­லங்­களில் ஓமிக்­ரான் பர­வி­யுள்ள நிலை­யில், இது­வரை 113 பேருக்கு அத்­தொற்று இருப்­பது கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லை­யில் ஐரோப்­பா­வில் ஓமிக்­ரான் பர­வும் வேகத்தை இந்­திய மக்­கள் தொகை­யு­டன் ஒப்­பிட்டு சில கணிப்­பு­களைத் தெரி­வித்து, எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளார் வி.கே.பால்.

வெள்­ளிக்­கி­ழ­மை­யன்று செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய அவர், பிரிட்­ட­னி­லும் ஆப்­பி­ரிக்க நாடு­களி­லும் உள்ள ஓமிக்­ரான் பாதிப்பு தொடர்­பான விவ­ரங்­க­ளைப் பகிர்ந்துகொண்­டார்.

பிரிட்­டன், பிரான்ஸ் போன்ற நாடு­களில் முழு­மை­யாக தடுப்­பூசி போட்­டுக்கொண்­ட­வர்­க­ளை­யும் ஓமிக்­ரான் பாதிப்பு விட்­டு­வைக்­க­வில்லை என்று சுட்­டிக்­காட்­டிய அவர், இந்­தி­யா­வில் கடந்த இரு­பது தினங்­க­ளாக அன்­றாட தொற்று எண்­ணிக்கை பத்தாயி­ரத்­துக்­கும் கீழ் குறைந்­துள்ள போதி­லும், அனை­வ­ரும் எச்­ச­ரிக்­கை­யு­டன் இருப்­பது நல்­லது என்­றார்.

பிரிட்­ட­னில் கடந்த வியாழக்­கி­ழமை 80,000 பேருக்­கும் வெள்­ளிக்­கி­ழமை 93,045 பேருக்­கும் கிரு­மித்­தொற்று உறு­தி­யாகி உள்ளது.

இந்தியாவில் நாள்தோறும் பாதிப்பு அதிகரித்து வருகிறது.