ஐந்து ஆண்டுகளில் 15 விபத்துகள்
புதுடெல்லி: கடந்த 2017 மார்ச் மாதம் முதல் இதுவரை முப்படைகளுக்குச் சொந்தமான 15 ஹெலிகாப்டர்கள் விபத்துக்குள்ளாகி இருப்பதாக மத்திய பாதுகாப்பு அமைச்சர் அஜய் பட் தெரிவித்துள்ளார். இந்த எண்ணிக்கையில் அண்மைய குன்னூர் விபத்தும் அடங்கும் என்று நாடாளுமன்றத்தில் அவர் கூறினார். இந்த விபத்துகளில் 31 பேர் பலியாகிவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேகதாது அணை: மூன்று மாதங்களில் முடிவெடுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
புதுடெல்லி: காவிரியின் குறுக்கே மேகதாது பகுதியில் அணை கட்டுவது தொடர்பாகவும் ராசி மணல் பகுதியில் அணை கட்டலாமா என்பது குறித்தும் மூன்று மாதங்களில் முடிவெடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு, கர்நாடகா, தமிழக அரசுசுள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவ்வாறு எடுக்கப்படும் முடிவு மனநிறைவைத் தரவில்லை எனில் மீண்டும் நீதிமன்றத்தை நாடலாம் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
காதலிக்கு கிறிஸ்மஸ் பரிசளிக்க கொள்ளையடித்த இளையர் கைது
டெல்லி: காதலிக்கு கிறிஸ்மஸ் பரிசு அளிப்பதற்காக இருசக்கர வாகனம், கைபேசி, மடிக்கணினி ஆகியவற்றைக் கொள்ளை யடித்த இளையரை டெல்லி காவல்துறை கைது செய்தது. கடந்த 14ஆம் தேதி டெல்லி சரோஜினி நகர்ப் பகுதியில் அந்தக் காதலரும் அவரது நண்பர்கள் இருவரும் இந்த திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டனர். ஆடவர் ஒருவரைக் கட்டிப்போட்டுவிட்டு அவரது வாகனம், கைபேசி ஆகியவற்றைக் கொள்ளையடித்துள்ளனர். பின்னர் காவல்துறையிடம் சிக்கியபோது அளித்த வாக்குமூலத்தில் காதலிக்குப் பரிசு அளிக்க பணம் இல்லாததால் இவ்வாறு செய்ததாக அந்த இளையர் கூறியுள்ளார்.
தூய்மை பிரசாரத்தைப் புறக்கணிக்கும் நகரங்கள்: பிரதமர் மோடி கோபம்
லக்னோ: தூய்மைப்படுத்தும் பணி ஆண்டுக்கு ஒரு முறை செய்யும் விஷயமாக இருக்கக் கூடாது என்றும் தூய்மையை ஊக்கப்படுத்தும் வகையில், வார்டுகளுக்கு இடையே மாதந்தோறும் போட்டிகள் நடத்தி, மிக அழகானவற்றுக்கு பரிசுகள் அளிக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி வலி யுறுத்தி உள்ளார். வாரணாசியில் அனைத்திந்திய மேயர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய அவர், தூய்மை பிரசாரத் தைப் புறக்கணித்து, கண்களை மூடிக்கொண்டு அலட்சியமாக இருக்கும் நகரங்களின் பட்டியலைத் தயாரித்து, அதை மக்கள் பார்வைக்கு பகிரங்கமாக வெளியிட வேண்டும் என்றார்.
அமேசானுக்கு ரூ.202 கோடி அபராதம்
புதுடெல்லி: 'பியூச்சர் ரீடைல்' நிறுவன முதலீடு தொடர்பான வழக்கில் அமேசான் நிறுவனத்திற்கு ரூ.202 கோடி அபரா தம் விதித்துள்ளது இந்திய போட்டி ஆணையம். முதலீடு தொடர்பான தகவல்களை முழுமையாக அளிக்காமல் மறைத்த புகாரில் அமேசான் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த ஆணையம் தெரிவித்துள்ளது.

