'ஐஎஸ்' அமைப்பில் 66 இந்திய வம்சாவளியினர்

'ஐஎஸ்' அமைப்பில் 66 இந்திய வம்சாவளியினர்

1 mins read
edbd7cc6-3282-4448-a789-3da08ee067f2
-

புது­டெல்லி: உலகை அச்­சு­றுத்தி வரும் 'ஐஎஸ்­ஐ­எஸ்' பயங்­க­ர­வாத அமைப்­பில் இந்­திய வம்­சா­வ­ளி­யைச் சேர்ந்த 66 பேர் இடம்­பெற்­றுள்­ள­னர். இத்­த­க­வலை அமெ­ரிக்கா வெளி­யிட்­டுள்­ளது.

அமெ­ரிக்க வெளி­யு­றவு அமைச்சு, ஆண்­டு­தோ­றும் தீவி­ர­வா­தம் தொடர்­பான அறிக்­கையை வெளி­யிட்டு வரு­கிறது. அந்த வகை­யில் 2020ஆம் ஆண்­டுக்­கான அறிக்கை தற்­போது வெளி­வந்­துள்­ளது.

அதன்­படி, அமெ­ரிக்க இந்­திய வம்­சா­வ­ளி­யி­னர் 66 பேர் ஐஎஸ் அமைப்­பில் இணைந்­துள்­ளது தெரி­ய­வந்­தி­ருக்­கிறது.

தீவி­ர­வா­தத்­தைக் கட்­டுப்­ப­டுத்து­ வ­தில் அமெ­ரிக்­கா­வுக்கு இந்­தியா முழு ஒத்­து­ழைப்பு கொடுத்து வரு­வ­தா­க­வும் பல்­வேறு நிலை­களில் இரு­நா­டு­களும் தீவி­ர­வா­தத்தை வேர­றுப்­ப­தில் இணைந்து செயல்­படு­வ­தா­க­வும் அமெ­ரிக்க வெளி­யுறவு அமைச்­சின் அறிக்­கை­யில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

நாடு கடந்த, வட்­டார தீவிரவாத சக்­தி­க­ளைக் கண்­ட­றிந்து அவற்றை ஒடுக்­கு­வ­தில் இந்­தி­யா­வின் என்ஐஏ எனப்­படும் தேசிய புல­னாய்வு முக­மை­யின் செயல்­பாட்­டைப் பாராட்டி உள்ள அமெ­ரிக்கா, இந்­திய அர­சின் தீவி­ர­வாத எதிர்ப்­புப் படை­களும் சிறப்­பா­கச் செயல்­ப­டு­வ­தாக அறிக்­கை­யில் தெரி­வித்­துள்­ளது.

எனி­னும், தீவி­ர­வாத செயல்­களை அரங்­கேற்­று­வ­தற்­கான ஆள் சேர்ப்பு நட­வ­டிக்­கை­கள் இந்­தி­யா­வில் அதி­க­ரித்­துள்­ள­தா­கச் சுட்­டிக்­காட்­டி­யுள்ள அமெ­ரிக்கா, மத மோதல்­களைத் தூண்­டு­வ­தற்கு இணை­யத்­தைப் பயன்­ப­டுத்­து­வ­தும் அதி­க­ரித்து வரு­வ­தா­கக் கூறி­யுள்­ளது.

இவற்­றைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தில் இந்­திய அதி­கா­ரி­கள் முனைப்பு காட்டி வரு­வ­தாக அமெ­ரிக்க வெளி­யு­றவு அமைச்­சின் அறிக்­கை­யில் மேலும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

காஷ்­மீ­ரில் அண்­மைக்­கா­ல­மாக ஐஎஸ் காஷ்­மீர் என்ற அமைப்பு செயல்­பட்டு வரு­வ­தாக மத்­திய புல­னாய்வு அமைப்­பு­கள் மத்­திய அரசைத் தொடர்ந்து எச்­ச­ரித்து வரு­கின்­றன.

இந்­நி­லை­யில், அமெ­ரிக்­கா­வின் தீவி­ர­வா­தம் தொடர்­பான புதிய ஆண்­ட­றிக்கை முக்­கிய தக­வல்­களு­டன் வெளி­வந்­துள்­ளது.