நீதிமன்ற குண்டுவெடிப்பு: மூத்த விஞ்ஞானி கைது

2 mins read
ba02baff-fba9-443e-8271-943e0804247f
-

புது­டெல்லி: டெல்­லி­யில் உள்ள ரோகிணி மாவட்ட நீதி­மன்­றத்­தில் டிசம்­பர் 9ஆம் தேதி காலை­யில் அறை எண் 102-ல் நிகழ்ந்த குண்டு­ வெ­டிப்­புச் சம்­ப­வத்­தில் ஒரு­வர் காய­ம­டைந்­தார். இது தொடர்­பாக விசா­ரித்த காவல்­துறை­யி­னர் மூத்த விஞ்­ஞானி பாரத் பூஷண் கட்­டா­ரியா என்­ப­ரைக் கைது செய்­துள்­ள­னர். இந்த விஞ்­ஞானி இந்­தி­யா­வின் பாது­காப்பு ஆராய்ச்சி மற்­றும் மேம்­பாட்டு நிறு­வ­னத்­தில் (டிஆர்­டிஓ) பணி­புரிந்து வந்­த­வர்.

இது தொடர்­பாக டெல்லி காவல் துறை ஆணை­யர் ராகேஷ் அஸ்­தானா நேற்று முன்­தி­னம் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் இது குறித்து விவ­ரித்­தார். வெடி­குண்டைத் தயா­ரிக்க எளி­தில் கிடைக்­கும் அமோ­னி­யம் நைட்­ரேட் பயன்­ப­டுத்­தப்பட்­டுள்­ளது.

இந்த சம்­ப­வத்­தில் டெட்­ட­னேட்­டர் மட்­டுமே வெடித்­துள்­ளது. வெடி­பொ­ருள் வெடிக்­க­வில்லை. அது வெடித்­தி­ருந்­தால் மிகப் பெரிய பாதிப்பு ஏற்­பட்­டி­ருக்­கும் என்று திரு ராகேஷ் கூறி­னார்.

வெடி­பொ­ருள் வைக்­கப்­பட்­டி­ருந்த கைய­டக்­கக் கணி­னிப் பையில் டெல்­லி­யில் குடோன் வைத்­தி­ருக்­கும் மும்பை நிறு­வ­னத்­தின் லோகோ இருந்­தது. அந்த நிறு­வ­னம் விசா­ர­ணைக்கு உத­வி­யது. இதன் அடிப்­ப­டை­யில் டிஆர்­டிஓ மூத்த விஞ்­ஞானி பாரத் பூஷண் கட்­டா­ரியா கைது செய்­யப்­பட்­டார். அவ­ரது வீட்­டில் இருந்து குண்டு தயா­ரிப்­ப­தற்­கான பொருட்­கள் கைப்­பற்­றப்­பட்­டன.

கட்­டா­ரி­யா­வுக்­கும் அவ­ரது அண்டை வீட்­டில் வசிக்­கும் அமித் பக்சி என்ற வழக்­க­றி­ஞ­ருக்­கும் குடி­நீர் சப்ளை உள்­ளிட்ட பல்­வேறு விஷ­யங்­களில் தக­ராறு ஏற்­பட்டு வந்­தது. இரு­வ­ரும் ஒரு­வர் மீது ஒரு­வர் காவல்­து­றை­யில் புகார் அளித்­துள்­ள­னர்.

இந்­நி­லை­யில் அமித்­பக்­‌சி­யைக் கொல்­வ­தற்­காக நீதி­மன்ற வளா­கத்­துக்­குள் வெடி­பொ­ருட்­களை, கட்­டா­ரியா கொண்டு வந்­துள்­ளார்.

வெடிகுண்டு தயாரிக்கத் தேவையான வெடி மருந்துகளை அவர் எங்கிருந்து வாங்கினார் என்பது குறித்து விசா­ரித்து வரு­வ­தாக காவல்­துறை ஆணை­யர் ராகேஷ் கூறி­னார்.